பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

176 தானா கூறுவது, அவர்களின் பொறுப்பும் பணியும் இந்த அளவோடு முடிந்துவிடல் வேண்டும், அவர்தம் அறிவாற்ற லுக்கு ஏற்ற அளவுக்கா இப்பணி இருந்திடக் காண்கிறோம் என்ற எண்ணம் நமக்கெல்லாம் எழத்தான் செய்கிறது; தம்பி{ அத்தரத்தினர் மீது நீ கோபித்துக்கொள்ளும்போது, எனக்கு அந்தப் பிரன்ச்சு அமைச்சருக்கு ஏற்பட்டது போன்ற கவலை தான் பிறந்துவிடுகிறது. இவர்களைக் கோபித்துக்கொண்டால்,இவர்கள் இதனையும் கூறாதிருந்துவிடின் என்ன செய்வது - ஏதோ இதையாவது சொல்கிறார்களே - ஓரோர் சமயத்திலாவது பேசுகிறார்களே- சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, பாதுகாப்புச் சுவர்களையும் பக்குவமாக எழுப்பிகொண்ட பிறகேனும்,சிலகூற வாய் திறக் கிறார்களே, இவர்களைத் தம்பி, கடிந்துரைத்தால், இதனையும் கூறாது இருந்துவிடுவரே என்ற அச்சம் எனக்கு. பேராசிரியர் சேதுப்பிள்ளை) அவர்கள் செந்தமிழின் சுவையினை நாட்டு மக்களுக்குவிருந்தாக அளித்திடும் நல்லவர்! பொன்னாடை போர்த்தி அப்புலவரைப்பெருமைப்படுத்தினர். நான் அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேனில்லைஎனினும், இருக்குமிடத்திருந்தே அவர் பெற்ற ஏற்றம் கண்டு இறும்பூ தெய்துபவன். அவர் அறியார் என்று எண்ணுகிறேன், அவரிடம் தொடர்புகொண்ட குழாத்தினரில் கூட - அவர் பால் பெருமதிப்புக்கொண்ட என்போன்றார் அதிகம் இரார். பேராசிரியர் சேது(ப்பிள்ளை) அவர்கள், தமிழின் ஒலி மாட்சி குறித்து, அழகுறப் பேசியிருக்கிறார் தமிழ் மொழிக்கே அணியாக விளங்கிடும் 'ழ'கரம் 'ற கரம் குறித்து எடுத்துக்கூறி, 'ழ' அளிக்கும் ஒலியின் இனிமையை எடுத்தியம்பி, இத்தகையை ஒலி மாட்சியை, பிறமொழிகள் பெற்றிராத ஒலிமாட்சியை, நந்தம் மக்கள், உணர்ந்து உவகைகொள்ளா திருத்தல் குறித்தும் அதன் உயர் வறியாது அதனைப் பாழ்படுத்திடும் போக்கினைக் கண்டித்தும் பேசியுள்ளார். எழுந்திரு -- ஏந்திரு என்றாகிவிட்டதையும், திருவிழா - திருவினா என்று கெடுவதையும், பழம் - பளம் ஆகிப் பாழ்படுவதையும், கிழவி, கியவிஆகி 'ழ'கரம் கேலியாக்கப்படுவதையும், எடுத்துக்காட்டி, நமது தாய் மொழிக்கே அழகளிக்கும் 'ழ'கரம் இங்ஙனம் பாழ்படுத்தப்படுகிறதே, கொச்சை பேசி மொழியினைக் கொலை செய்கிறார்களே என்றுகூறிக், கசிந் துருகி நிற்கிறார்.