பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

178 விலும், கடலின் மீதும், குன்றின் மீதும், களிறு ஏறுவோனும், காற்றை அடக்குவோனும், எங்கும் எவரும் பேசி மகிழ்ந்த மொழி, இன்று, எல்லாத் துறைகளிலும், பேராசிரியர் பெருங் கவலை கொள்வதுபோல, ஒலிமாட்சி இழந்து மட்டுமல்ல, நிலை இழந்து நிற்கிறது! கேட்பார் யார்? எங்குளர்?மொழியின் வளம் பேசிமகிழ்வோர் உளர் ஒலி அழகுகாட்டி உவகை ஊட்டுவோர் உளர்! மொழியின் நிலை? அந்நிலைக்கு வந்துள்ள கேடு? அக்கேட்டினை மூட்டிடும் கெடுமதி கொண்டோர்! அவர்தம் அடிதொட்டு ஏற்றம்பெற எண்ணும் முதுகெலும் பற்றோர்1 இவை குறித்து எடுத்தியம்ப யார் உளர்? அவள் காற்சிலம்பு! கைவளை! அவள் மேனியில் இடம் கொண்டோம் என்பதால் கர்வம் கொண்டிருந்த சச்சு! அவள் கரம்பட்ட செம்பஞ்சுக் குழம்புக் கலயம்! அவள் தோகை மயிலெனச் சாய்ந்திருந்த மஞ்சம்!...... என்று காட்டிக் காட்டி, பெருமூச்சுவிட்டு, கண்ணீரையும் சிந்தவீட்டு, அம்மங்கை நல்லாள் எங்கே? என்று கேட்பவனிடம், "அவளா? இமயத் தான் இழுத்துச் சென்றான் - என்னை எண்ணி எண்ணி அவள் சிந்தும் கண்ணீர் வெள்ளத்தில், அவன் ஓர்நாள் அழிந் தொழிந்து போவான்-உறுதி! உறுதி!உறுதி!-- என்று கூறிப் பயன் என்ன? இருந்ததை இழந்தோம் என்பது கேவலம். இழந்திடுவோம் என்ற நிலையை முன்கூட்டி அறிந்திடாதிருந் தது மடைமை, அறிந்தபிறகு தடுத்திடும் முயற்சியில் ஈடு படாதிருத்தல் கொடுமை. இழந்தபின் காதணி, காலணி, காட்டிக் கண்ணீர் சிந்துவது, இவை யாவும் கூட்டிச்சேர்த்த சேறு அன்றோ! மொழி இன்று தாக்கப்படுகிறது. சிறுகச்சிறுக அழிக்கப் பட்டு வருகிறது-அரச அவை அதனை ஏற்க மறுக்கிறது- அஞ்சல் நிலையத்தார் அதனை அடித்து விரட்டுகிறார் கள்-நாணயம் அதனைத் தாங்கிட மறுக்கிறது- நயாபைசா வருகிறது! இந்நிலையில், பழம் பளமானது பற்றியும், கிழவி கியவியானது பற்றியும். காற்றைக் காத்தாக்கி, நாற்றைநாத் தாக்கி விட்ட கொடுமை பற்றியும் எடுத்துப் பேசுவது, சாமான்யர்களுக்கே ஏற்றதாகாது என்றால், பேராசிரியர் களுக்கே இவ்வளவுதான் கூறமுடியும் என்றா நாம் மன அமைதி கொள்ளமுடியும்! கேட்டால், இதனையும் கூறாது சேது (ப்பிள்ளை) பெரும் பேராசிரியர் வையாபுரி(ப்பிள்ளை) யாக வடிவமெடுத்து விடுவாரோ, என்றல்லவா அச்சம் பிறக் கிறது. எழுப்பி விடாதே இவனும் வெளியே போய்விடப் போகிறான், என்று கூறின பிரன்ச்சு அமைச்சன் போலல்ல வா, ஏதோ, இதனையாவது பேசுகிறாரே என்று எண்ணிக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஏனெனில் இது மிகப் பெரிய