பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

179 வர்கள் மிகத் துணிவுடன் மிகப்பெரிய உண்மைகளை மிகச் சாமர்த்தியமாக மறைத்துவிடும் காலமாக இருக்கிறது! கால மாகவா? மிகப் பெரிய மனிதராவதற்கு, இஃதொன்றே யன்றே, வழியாகவே அமைந்து விட்டிருக்கிற கிறது. தம்பி, பணிக்கர் தெரியுமல்லவா உனக்கு! சீனாவிலும், ஈஜிப்டிலும், பணியாற்றிய பெரியவர். அவர் கூறுகிறார் துணிந்து, மொழி, பண்பாட்டுக்கு உயிர் என்கிறார்கள், மொழி மூலமாகத்தான் பண்பாடு உருவாகிறது வளருகிறது என்கி றார்கள், அது தவறு, பண்பாட்டினை எடுத்துக்கூறும் முறை களில் மொழி ஒன்று, அவ்வளவுதான்! என்கிறார். கூறிவிட்டு, மொழிவழி அரசு கேட்பது தவறு, மிகப் பெருந்தவறு! என்று பேசுகிறார். அவர் சென்னையில் பல்வேறு இடங்களில் பேசி யிருப்பதிலிருந்து, அவர் மொழிவழி அரசு கேட்கவில்லை என்பது மட்டுமல்ல, "எனக்கு என்ன வழி?" என்று நேரு பண்டிதரைக்கேட்கிறார்என்பதும் நன்றாகத் தெரிகிறது. 'மொழிக்கும் பண்பாட்டுக்கும் தொடர்பு இல்லை' என்று துணிவுடன் கூறுகிறர் பணிக்கர். பண்பாடு, பாரதத்தில் இருக்கிறது, இராமாயணத்தில் இருக்கிறது. வங்க மொழிமூலம் ஓர் பண்பாடு, மராத்தி மூலம் மற்றோர் பண்பாடு, தமிழ்மூலம் தனியானதோர் பண் பாடு ஏற்பட்டுத் தழைத்திருக்கிறது என்று கூறுவது தவறு என்கிறார். மொழி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கக் கூடிய ஓய்வோ வாய்ப்போ பெறமுடியாத அளவுக்கு, உலகு எங்கணும் ஓடோடிச்சென்று, உபசார மொழிகளைச் சொறிந்து உச்சி ஏறி நிற்கும் தலைவர்களுடன் உறவாடிடும் பணிக்கர், "தொல்காப்பியம் என்றோர் ஏடு உண்டு ஐயா! அது எமது தொன்மையான பண்பாட்டினை உருவாக்கிய கருவூலம்” என்று கூறினால், அவர் 'ஒரு சர்வதேச ரீதியான! புன்ன கையை வருவித்துக் கொண்டு, இதெல்லாம் பழைய-கஞ்சி என்று கூறிவிடுகிறார்! மொழியின் தொன்மை மென்மை, வளம், இவைகள் இடது கரத்தால் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியன என்கிறார். வலக்கரம் கொண்டோ, இராமாயண பாரதச் சேற்றிலே அமிழ்ந்து கிடக்கும் செந்தாமரை இதழ் களைப் பொறுக்கி எடுக்கும் பணியிலே ஈடுபடுகிறார். பெரியவர்! எனவே பெருந்துணிவுடன் இவ்வண்ணம் பேசு கிருர்! பேராசிரியர்களோ, 'ழ'கரம் பாழ்பட்டுவிட்டதே. "ற கரம் 'ட கரமாகிவிட்டதே என்ற கவலையில் தங்களை மறைத் துக் கொள்கிறார்கள்! இமயம் முதல் குமரிவரை, பணிக்கர், இராமனையும் கிருஷ்ணனையும் பார்க்கிறாராம். 'பாரதம்' முழுவதும் பகவத்