பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

180 கீதை இருக்கிறதாம். எனவே, மொழிகளைக் கடந்து ஓர் பண் பாடு இருந்திடுவது புலனாகிறதாம். எப்படி, வாதம்? வாதத்தின் திறத்தை அல்ல தம்பி, நான் கவனிக்கச் சொல்வது. அந்தத் துணிவைக் கவனித் தாயா!! இராமனும் கிருஷ்ணனும், இமயம்முதல் குமரிவரை இருக்கிறார்கள் -எனவே மொழிவழி அரசு கேட்பதோ, மொழி கொள்வதோ வழி பண்பாடுகள் அமைகின்றன என்று கூடாது என்று வாதாடுகிறார்- இந்தத் துணிவு, எவரிடம் காட்டப்படுகிறது என்று கவனித்தாயா தம்பி! இங்கு, திரு இடத்தில்! திருஇடத்தில் மட்டுந்தான்! லிஸ்பனிலிருந்து லெனின்கிராட் வரையில், இலண்டனி லிருந்து ஜிப்ரால்டர் வரையில், ஆட்டவாவிலிருந்து அடி லெய்ட் வரையில், என்று இப்படி குறுக்கும் நெடுக்குமாகப் பல கோடுகள் கீறிக்காட்டி, நீயும் நானும் கூறமுடியும். இங் கெல்லாம் ஏசுநாதர் தெரியும்! பைபிள் படிக்கப்படுகிறது! எனினும் இங்கெல்லாம் ஏசுவும்மேரி அன்னையும் தெரிவதால், பைபிள் இங்கெல்லாம் புனித ஏடாக இருப்பதால், ஒரே பண் பாடுதான் இருக்கிறது ஒரே என்று அறிக, எனவே அரசு அமைதலே பொருந்தும் என்று உணர்க என்று கூறி டவும், அமெரிக்கா, பிரேசில், கானடா, மெக்சிகோ, அர்ஜெண்டினா, இங்கிலாந்து, டென்மார்க், நார்வே ஸ்வீடன், ஸ்பெயின், பிரான்சு, இத்தாலி, என்றெல்லாம் தனித்தனி அரசுகளாக ஆகாது, ஒரே பண்பாடு. ஒரே அரசு என்று பணிக்கர் அங்கு எங்கும் பேசத் துணிவுகொள்ளமாட் டார். இங்குதான், எதையும் பேச எவரையும் அனுமதித்து விடுகிறோமே! பேசுகிறார்! . ஜாதி-வர்ணாஸ்ரமம்-சுவர்க்கம்-இவைபோன்றமுறை களே எமக்கு உரியன அல்ல, எனவேதான் எமது மொழியில் அச்சொற்களே இல்லை, என்று புலவர் பெருமக்கள் கூறு கின்றனர். இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வாணிபம் எமது முறையல்ல. எமது இலக்கியம் காண்போர் இதனினை அறிவர் என்று புலவர் பெருமக்கள் பேசுகின்றனர். எமது நிலமே, ஐந்தாகத் தரப்பட்டிருக்கிறது. எம்மிடம் திணை ஒழுக்கம் உண்டு. எமது ஆட்சிமுறை, போர்முறை யாவுமே தனியான பண்பாடு விளக்கமளித்திடும். என்று இவ்விதமெல்லாம் பேசுகின்றனர்-முத்தமிழ் யாம் இயல், இசை, நாடகம் என்று கூறும் நிலை பிற மொழி யாளருக்கு இல்லை என்று கூறிப் பெருமிதம் கொள்கின்றனர்.