பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

189 17. காவேரி பேப்பர் மில்ஸ் லிமிடெட். 18. புனலூர் பேப்பர் மில்ஸ் லிமிடெட்: W.A. பியர்ட் செல் ஆண்டு கோ லிமிடெட் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களின் பட்டியலை நன்றாகக் கவனித்து வாருங்கள். ஏறக்குறைய 24/25 ஆலைகளின்பூரண விற்பனையாளர்களாக வடநாட்டார்களாகவும், ஒரு சிலவற் றிற்கு அன்னிய நாட்டினருமே விற்பனையாளர்களாக உள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தென்னாட்டின் காகித வாணிபம் அனைத்தும் வட நாட்டினரின் கைக்குள் அடக்கப்பட்டு, தென்னாட்டுக் காகித வாணிபம் அனைத்தும் (எடுப்பார் கைப்பிள்ளை'யின் நிலையை ஒத்ததாக அமைக்கப்பட்டு விட்டது-பரிதாபத்துக் குரிய செய்தி. அவர்களின் கண்டு விரல் அசைந்தால், தென்னாட்டு காகித வ ணிகமன்னர்கள் அனைவரும் மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்டு விடுவார்கள் என்பது திடுக்கிடும் செய்தியே யானாலும், உண்மையானதே. மறுக்கமுடியாத, பரிதாபத்துக் குரியநிலை, அழிக்கப்படவேண்டிய நிலை என்றைக்கு வருமோ, அன்றேதான் நம் வாழ்வு விடியும். அந்நாள் எந்நாளோ 0 0 0 வாழ்வு விடியவேண்டும்! அந்நாள் எந்நாளோ!!- என்று ஏக்கத்துடன், இந்தக் கோவை தம்பி குமுறுகிறார்-"காகிதம்' மட்டும்தான் இங்கு கவனிக்கப் பட்டது - இதற்கேகூட, இந்த ஏக்கக் குரல் கிளம்பிக் கொண்டிருக்கும்போதே ஒரு எக்காளம் கேட்கிறது - வடக்கே, மற்றோர் புதிய காகித ஆலை துவக்கப் பட்டிருக்கிறது என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. காகித ஆலைகள் சம்பந்தப்பட்ட மட்டும்தானா இது? இல்லை, இல்லை! எந்தத் தொழிலிலும் வடநாடுதான் ஆதிக்கம் செய்கிறது- சர்க்கார் தீட்டும் எந்தத் திட்டமும் மேலும் மேலும் வடநாட்டைக் கொழுக்கச் செய்வதாகத்தான் இருக் கிறது - சர்க்காரே வடநாடு தானே ! இந்தியா ஒரே தேசம் என்ற கண்ணோட்டம் வேண்டும்; வடக்கு, தெற்கு என்று பிரிப்பதுதவறு, தீது, அறிவீனம் என்றுபேசுவதால் மேதை'ப் பட்டம் கிடைத்துவிடும் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள்- ஆனால், அவர்களின் தொகையும் குறைகிறது; அவர்களிடம் மக்களுக்கு அருவருப்பும் வளருகிறது' வடநாட்டு முதலாளி. தென்னாட்டு முதலாளி என்று ஒரு பாகுபாடு உண்டா! கதியிலிகாள்! மார்க்சின் சித்தாந்தத்தை அறியாத வகுப்புவாத வெறியர்காள்! ஏழை எங்கும்வதைபடு கிறான். வடக்காக இருந்தால் என்ன,தெற்கு ஆனால் என்ன?