பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

190 வடக்கையும் வறுமை வாட்டுகிறது, இல்லாமை, போதாமை கொட்டுகிறது! - என்று பேசுகின்றனர் கம்யூனிஸ்டுகள்! காங்கிரஸ்காரர்களைவிடக் காரசாரமாகப் பேசி, வடநாட்டுக் குக் கங்காணி வேலை பார்க்கும் இந்தக் கம்யூனிஸ்டுகளின் வாயும் அடைபடும் விதமாக நிலைமை வளர்ந்து விட்டிருக் கிறது. வடநாடு - தென்னாடு என்று பேசுவது வர்க்கப் போராட்ட சித்தாந்தத்துக்கு உகந்ததல்ல என்று பேசிவந்த வர்கள், இன்று, நாடு மெள்ள மெள்ள, ஆனால் உறுதியுடன் போர்க்கோலம் கொள்வதையும், நாட்டை வடவருக்குக் காட்டிக் கொடுப்பவர்களைக் கயவர் என்று கண்டித்து அவர் தம் கருத்தினைக் கருக்கிடவும், பிடியினை நொருக்கிடவும் துடி துடித்துக் கொண்டிருப்பதையும் கண்டு, கிலிகொண்டு, பொது மக்களின் சீற்றத்தால் சின்னாபின்னமாக்கப்பட்டு விடுவோம் என்று அஞ்சி, இப்போது, தென்னாட்டுக்குத் தொழிற் சாலைகள் வேண்டும், சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை வேண்டும், நெய்வேலி நிலக்கரியை வெளியே கொண்டு வந் தாக வேண்டும், என்று 'முழக்கம்' கிளப்ப முன் வருகிறார் கள். உள்ள, இரும்புத் தொழிற்சாலைகள் போதாது, மேலும் ஒன்று வேண்டும், அது சிந்து நதி தீரத்திலோ, சீராளா விலோ, அசாமிலோ, அமிர்தசரசிலோ, எங்கே அமைக்கிறீர் கள் என்பதுபற்றி எமக்குக்கவலை இல்லை; நாங்கள் அத்தகைய குறுகிய மனப் போக்கினரல்ல, எமது கண்ணோட்டம் பரந்து விரிந்து இருப்பது, எமக்கு வடக்கும் கிடையாது தெற்கும் கிடையாது, என்று பேசுவது, மிக விரைவில், சீந்துவாரற்றுப் போகும் கிலிகொண்டு, நிலையைத் தந்துவிடும் என்று சேலத்து இரும்பு, நெய்வேலி நிலக்கரி என்று பேசுகிறார். கள்-எங்களைக் “காட்டிக்கொடுப்பவர்கள்"-"கயவர்கள்" "கங்காணிகள்'" என்று கண்டித்து எதிர்த் தொழித்திடக் கிளம்பிவிடாதீர்கள், நாங்களும், சேலம், நெய்வேலி இவை சார்பாக வாதாடுகிறோம் என்று கூறி, பல்லிளிக்கத் தொடங்கி விட்டனர்! 0 0 0 ஜனாப் ஜின்னா,பாகிஸ்தான் பரணி பாடியபோது, காங் கிரஸ்காரர்களை விடக் கடுமையாகத் தாக்கினார்கள், கம்யூனிஸ் டுகள். நாடு துண்டாடப்பட விடமாட்டோம் என்று முழக்க மிட்டனர். பிரிவினை எதிர்ப்பு நாள் மாநாடு -மகஜர் - வெகுஜன எதிர்ப்பு-பொதுஜன அணிவகுப்பு-என்றெல் லாம் பலப்பல அதிர்வேட்டுகள் கிளப்பினர். 'ஆனானப்பட்ட காந்தியாரும், அதி வீரதீரர் படேலும், அலகாபாத் பண்டித ரும், பஞ்சதந்திரம் தெரிந்த ஆச்சாரியாரும் கிளப்பிய எதிர்ப் புகளே முறிய ஆரம்பித்தன - அவர்களே ஜின்னாவின் (முக வாய்க்கட்டை'யைப் பிடித்துக் கொண்டு, கெஞ்சும் நிலைபிறந்