பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

192 மாண்பும் பொங்கும் நாட்டிலேயா இத்தகைய ஏமாளி பிறந் திட வேண்டும்? உன் தாயகம், தன்னரசு இழந்ததை, தன் மொழி இழந்ததை, விழியைக் குளமாக்கிக் கொண்டதைக் கண்டறியும் அளவுக்குமா உனக்குக் கருத்துத் தெளிவு ஏற் படாமற் போய்விட்டது! ஏடா! மூடா!! உன்னைச் சுற்றி லும் அழகிய மலையும், எழிலோங்கும் ஆறுகளும், பச்சைப் பசேலென்ற வயலும், பாங்கான பல தருக்களும் இச்சையூட்டத் தக்க எத்தனையோ வளமும் இருந்தும் வறுமை நம்மைவாட்டி டக் காரணமென்ன? உழைப்பு ஏன் வீணாக்கப்படுகிறது? உண்டுகொழுத்திடுபவன், உழைத்திடக் காணோமே,அது ஏன்? கொட்டிக் கொடுக்கும் வரிப்பணம் வேறு எங்கோ கொண்டு செல்லப்படுகிறதே,சரியா? பட்டியில் மாடுகள் போல, ஆளவந்தார்கள் உள்ளனரே, முறையா? என்றெல் லாம், எண்ணிப் பார்த்திடத் தெரியவில்லையா உனக்கு. பேதையே! அறிவுக் களஞ்சியத்தின் அழகினைக் கெடுத்திடும் அவமானச் சின்னமே! வெட்கப்படு! வெட்கம் வேலாகிக் குத்தட்டும் உன்னை! தலைகுனிந்து நட் தையலரும் தன்ன ரசுக்கான போர்புரிய முன்வந்த போது, 'அசை போட்டுக் கொண்டு கிடந்தோமே என்றெண்ணி, முக்காடிட்டுக் கொண்டு நட! விடுதலைப் போரிலே வீழ்ந்துபட்ட வீரர், நடந்துசென்ற பாதையில் காணக்கிடக்கும்குருதிக்கரையிலே, கண்ணீர் சொரிந்து வேண்டிக்கொள்! ஓர் நாள், இப்படி 'ஏமாளிகள் கேட்கப்படுவர், திராவிட விடுதலை கண்ட பிறகு, விடுதலைப் போரினை வெற்றிகரமாக நடாத்திய மாவீரர்களால்! , திரு இடத்தின் இன்றைய தாழ்நிலையை அறியுமளவுக்குத் தெளிவு அற்றுக் கிடக்கும் ஏமாளிகள் கண்டிக்கப்படுவர், ஆனால் அனுதாபத்தோடு பரிதாபம்! அவன் கருத்துக் குருடன், ஆகவேதான் தந்தையர் நாட்டினை மீட்டிடும் தன் மானப் போரில் ஈடுபடாதிருந்தான், என்று எண்ணுவர். ஆனால் அறிவில் தெளிவு இருந்தும், உண்மைக்காகப் பரிந்து பேசவும், உரிமைக்காகப் போரிடவும் முன் வராததுடன் எத்தகைய ஏசல், எதிர்ப்பு, இடர், இன்னல், பழி பாதகம், எதுவரினும் அஞ்சாது, அறப்போரில் ஈடுபட்டு, அன்னையின் கரத்தினில் விலங்குகளா! என்று ஆர்த்தெழுவோரை, எதிர்த் திடும் அற்பர்கள், காட்டிக்கொடுக்கும் கயவர்கள், எதிரி களுடன் கூடிக்கொண்டு கொலுப் பொம்மைகளாகும் துரோகிகள் இருக்கிறார்களே, இவர்களை, விடுதலைபெற்ற திராவிடம், சும்மாவிடாது! பெற்ற தாயை மானமழித்திடத் துணிந்தவனுக்குத் தாள்பிடித்துக்கிடந்தவனே, பிறந்த பொன்னாட்டை மாற்றான்