பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

193 சீரழிக்கும்போது கண்டு, கரம் அசைக்காமல் அவனுக்குக் கட்டியம்கூறிக் கிடந்த கடையனே! உனக்கென்று ஒரு மொழியும், மொழிவழி ஓர் சீரிய வாழ்வும் அளித்து, உனக் சாகத் தென்றலையும் தேனையும், தினையையும் நெல்லையும், தீஞ்சுவைக் கனிகளையும் சுவைமிகு சுனைகளையும் கானாறுகளை யும் களிறுகளையும், ஓங்கி வளர்ந்த வரையினையும் சந்தனத் தருக்களையும், கடல் முத்தையும், கட்டித் தங்கத்தையும், மலர்க்கொல்லைகளையும், மான் கூட்டங்களையும், வேட்டைக்கு வேங்கையையும் வீட்டுக்கு ஆவினங்களையும், எங்கும் பச்சை யையும், உன் இச்சையைப் பூர்த்தி செய்ய எல்லா வளங்களை யும் தந்த தாயகத்தை, மாற்றான் வெள்ளாட்டியாக்கி, கூத் தலைக் கலைத்து, குங்குமத்தைக்குலைத்து,ஆடையைக்குறைத் துக் காலால் உதைத்து, ஏடி! வெள்ளாட்டி! தொட்டிழுக்கும் வேளையிலே, வெட்டுவேன் என்று பதட்டம் பேசுகிறாய், என் சுட்டு விரல் அசைத்தால், உன் னைச் சுக்கு நாறாக்க என் சூறாவளிப் படை கிளம்பும், உனக்கேன் ஒரு தனிக்கொற்றம், வீழ்ந்துகிட என் கொட்டகையில், பிழைத்துப் போ, நான் தரும் பிச்சையை உண்டு, பேய்க்கோலம் காட்டுவாயேல், வாட்டிடுவேன் சூட்டுக்கோலால்!-என்று கொக்கரித்தபோது, மாமிசப் பிண்டமே! உன் இரத்தம் கொதிக்கவில்லையா? இதயம் துடிக்க வில்லையா? உடல் பதறவில்லையா? கண்களை இறுக மூடிக் கொண்டாயா! எப்படி உன் மனம் இடம் தந்தது, தாயகத்தைக் காலின் கீழ் போட்டு மிதித்தவனுக் குக் கைகட்டி வாய்பொத்தி நிற்க! சிறு குத்தீட்டி கிடைக்க வில்லையா உனக்கு? ஒரு முழக் கயிறுக்கும் பஞ்சமா? ஆழ் கிணறோ, மலை உச்சியோ, கிடைக்காமலா போய்விட்டது? உயிரையும் வைத்துக்கொண்டு உன் அன்னைக்குப்பங்கம் விளை வித்தவனை எதிர்க்கும் வீரப்போரில் ஈடுபடாமலிருக்கஉன்னால் எப்படி முடிந்தது? கோழையானால் கூடப் பரவாயில்லை, மன் னித்து விடலாம்! கொடியவனே! நீ, மாற்றான் கோட் டைக்குக் காவலாக அல்லவா நின்றிருந்தாய்? உன் உடன் பிறந்தானின் உடலைக் கழுகும் காக்கையும் கொத்தித் தின்ற வேளையில், கூடப் பிறந்த கேடே! நீ, மாற்றான் தந்து மது வையும் மாமிசத்தையும் உண்டு கிடந்தாயே! இயற்கையாகச் சுரக்க வேண்டிய நாட்டுப் பற்று? எழாத உள்ளத்தைக் கொண்டு, ஒரு உடலம் நிற்பதா-எம் கண்முன் நடமாடு வதா?- எமது தாயகம் இத்தகைய இழி மகனை, இனத்துரோகி யைச் சுமந்து கொள்வதா, விடுதலைப் போரிலே வீரர் கொட் டிய குருதியால் புனிதமாக்கப்பட்டுள்ள இந்த மண்ணில், மாபாவி! உன் நிழல் படுவதும், கேவலம்! ஓடிப்போ! மனித உருவம் தாங்கி நிற்கும் மிருகமே, எமது கோபம், வேலாக, வாளாக, தூக்குக் கயிறாக, துப்பாக்கிக் குண்டாக