பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

194 மாறுமுன், ஓடிப்போ! கிழங்கு தோண்டித் தின்று பிழைத் துக் கொள்! கிழப்புலி கொன்று தின்ற மானின் மிச்சம் மீதி கிடைத்திடின், தின்று பசி போக்கிக்கொள்[ வீரக் கோட்டத்தைக் களங்கப்படுத்தாதே! அகமும் புறமும்கண்டு அகமகிழ்ந்த தமிழர் திருநாட்டில், வாயும் வயிறும்பெரிது என் றெண்ணிக்கிடந்தவஞ்சகனே, உனக்கு இடம் இல்லை! ஓடிவிடு, ஓடிவிடு, காதலனைக் களத்திலே இழந்தகாரிகையரின் கண்ணீர் உன்னைச் சுட்டெரித்து விடும், பல்லிழந்த பாட்டியின் சொல் லம்பு கூட உன்னைச் சல்லடைக் கண்ணாக்கிவிடும். சிறார் காணின், அவர் தம் விழி சிவந்திடும். உன்னைப்பற்றி மேலும் பேசிடின், எம் வாயும் நாறிடும். நாசகாலனே, நாட்டைக் காட்டிக் கொடுத்தவனே, ஓடு, ஓடு, உனக்கு ஏற்ற ஓர் உத வாக் கரை இடம் தேடி, ஓடு,"-என்றெல்லாம் கண்டிப்பர், கடமையை நிறைவேற்றி வெற்றி கண்டோர்- எதிர்கால இன்பத் திராவிடத்தில். 0 0 0 மெல்லிய கோடுகள் தெரிகின்றன, கம்யூனிஸ்டுகளுக்கு- ஆகவேதான், மெல்லவும் முடியாமல் விழுங்கவும்முடியாமல், தென்னாட்டுக்குத் தொழில், சேலத்து இரும்பு, நெய்வேலி நிலக்கரி,- என்று பேசிப் பார்க்கிறார்கள். இப்போதும் இவர்களும், காங்கிரசிலே உள்ளவர்களில் சிலரும், தென்னாட்டுக்குத் தொழில் வளம் செய்து தர வேண் டும், திட்டங்கள் வகுப்பதில் ஓர வஞ்சனை காட்டுவது கூடாது, என்றுதான் டில்லியிடம் கேட்கிறார்கள், விண்ணப்பித்துக் கொள்கிறார்களே தவிர, ஏன் இந்தக் கேவல நிலை, தொட் டண்ணன் தோட்டத்திலே வெட்டண்ணன் மாடு மேய்வா னேன், அதைக் கொஞ்சம் பிடித்துக்கட்டு என்று புட்டண் ணன் கெஞ்சிக் கிடப்பானேன், என்று எண்ண மறுக் கிறார்கள். வாழ வழி இருக்க, வளம் யாவும் குறைவின்றி இருக்க, வாழும் வழியை அமைத்துக் கொள்ளும் அறிவாற்றல் இங்கி ருக்க, வாழ்ந்தவர்கள் நாம் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க, எதற்காக, வடவரிடம் நமது பிடரியைக் கொடுத்து விட்டு, பிறகு, "மெள்ள, மெள்ள வலிக்கிறது, வலிக்கிறது,' என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்? இங்கு இல்லாத எதையும் நமக்காகப் பெற்றுத் தரும்படி, வடவரை நாம் கேட்டோமில்லை - இங்கு புகுந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டு, எமது செல்வம் எமக்குப் பயன்படாமற் செய்யும் கொடுமையைத் தானே எதிர்க்கிறோம். மாதாவுக்கு மத்தாப்பூ வண்ணச் சேலையா கேட்கிறோம், அன்னையின் ஆடையை, அக்ரமக்காரனே, பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த