பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

.195 அக்ரமம் என்றல்லவா கேட்கிறோம். உரிமையைக்கேட்கிறோம் உபகாரம் அல்ல. இழந்ததைக் கேட்கிறோம், இரவல்பொருள் அல்ல; எம்மிடமிருந்து பறித்துக் கொண்டதைக் கேட்கிறோம் பிச்சை அல்ல; இந்த மூலக் கருத்தை உணரா முன்னம் வட வரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும். தம்பி! இந்த மூலக் கருத்தைத்தான் உன் துணைகொண்டு, நமது கழகம் நாட்டிலே பரப்பிக்கொண்டு வருகிறது. பளிச் செனத் தெரியாவிட்டாலும், விடிவெள்ளியின் வரவுக்கான வண்ணம், மெல்லிய அளவிலே தெரியத்தான் செய்கிறது. ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் வகுப்புவாதியா என்று கேட்டுப்பார் காங்கிரசாரை? பகைப்புயலால் பதவி ஆட்டம் கொடுத்தபோது, அதைக் காத்திட முடியாமற் போய்விட்ட பரிதாபத்துக்குரிய பெரியவர் என்று வேண்டு மானால் கூறுவார்கள் - அவரை வகுப்பு வாதி, பிளவு மனப் பான்மையினர் என்று காங்கிரசாரே கூற மாட்டார்கள். ரொம்ப பொறுமைசாலிகூட அவர். அதுமட்டுமல்ல, போது மென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று கருதுபவர். இல்லையானால், தம்பி, நாடாண்ட அந்த நல்லவர், முப்ப தாண்டுகளுக்கு மேலாக மக்கள் தொண்டு புரிந்து உரம் பெற் றவர், இப்போது, ஒரு பள்ளிக்கூடம், குருகுலம் நடத்தினால் போதும், ஏதோ கண்ணைப் பறித்த கடவுள் இந்தக் கோலா வது கொடுத்தாரே என்ற முறையில், முதலமைச்சர் பதவி போனால் போகட்டும், ஏதோ குருகுல அதிபர் எனும் நிலையா வது கிடைக்கட்டும்,என்று திருப்தி அடைவாரா? அவ்வளவு நல்லவராலேயே, வடநாடு நடந்து கொள்ளும் போக்கும், தென்னாடு புறக்கணிக்கப்படும் தன்மையும் கண்டு, சகித்துக் கொள்ள முடியவில்லை. நம் ராஜ்யத்தில் எவ்வளவு வரிபோட முடியுமோ அந்த அளவுக்குப் போட்டாகிவிட்டது. மத்ய சர்க்காரிடமிருந்து கிடைப்பது அதிகமாக இல்லை. மத்ய சர்க்காரிடமிருந்து உதவி வேண்டுமென்று வற் புறுத்திக் கேட்பது தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் குறைவு, தலைவிதி என்று நினைத்துக்கொண்டு, நாம் சும்மா இருந்து விடுகிறோம். மத்ய சர்க்காரிடம் இதை வற்புறுத்த வேண்டும். கட்சிச் சார்பில்லாமல் போரிடவேண்டும் - அழுகிற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும். ஆகையினாலே தமிழ் நாட்டு மக்கள் அதிகக் கூச்சல் போடவேண்டும். அப்போது தான் ஏதாவது கிடைக்கும்.