பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

200 பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும் நாட்டிலே, பவனியாம், பவனி! வெட்கமில்லையா! வேதனையா யில்லையா! விசேஷ ரயிலாம்! பிரத்யேகப் பாதையாம்! அலங்கார மேடையாம்! போலீஸ் அணிவகுப்பாம்! எவ் வளவு ஆடம்பரம் பார்த்தீர்களா! ஏழையின் பாழாகும் விதத்தைக் கண்டீர்களா? பணம் ஏழை எளியவர்கொட்டுவது கண்ணீர், ஏய்த்துப் பிழைப் பவன் குளித்திடப் பன்னீர்! ஏனென்று கேட்டிட வீரர் இல்லையா, விவேகி இல்லையா, தீரர் இல்லையா, ஆண் மகன் இல்லையா? என்றெல்லாம் சிலர் முழக்கமிட்டனர், முணு முணுத்தனர் பலர், பத்திபத்தியாக எழுதித் தள்ளினர் சிலர் பாமர மக்கள் பதைத்தனர், பதறினர், பணம் பாழா கிறது? பணம் பாழாகிறது!! என்று கொதித்தெழுந்து கூறினர். கவர்னர், வைசிராய் ஆகியோரின் 'விஜய'த்தைச் சாக் காகக்கொண்டு, நமது நகரங்களைத்தானே அழகுபடுத்துகிறார் கள், நமது பாதைகளைத்தானே செப்பனிடுகிறார்கள், இது நமக்கு மறைமுகமாகக் கிடைக்கும் நன்மைதானே, என்று அப்போது வாதாட, தேசீயவாதிகளின் மனம் தரவில்லை! இடம் இப்போது நேரு பண்டிதரின் பவனி, நித்திய நிகழ்ச்சியாக இருக்கிறது. கார்! பிரத்யேக விமானம்! ஸ்பெஷல் இரயில்! ஸ்பெஷல் மக்களைக் காணமட்டுமல்ல, மலை உச்சி ஏறி மகிழ, மலர்த் தோட்டம் கண்டு இன்புற, அலங்காரப் படகு மூலம் ஆறுகளை கடந்து ஆனந்தம்கொள்ள, கிராமிய நடனம்கண்டு களிப்படைய, குகைச் சித்திரங்களைக் கண்டு வியந்திட, கோயிற் சிற்பங்களைக் கண்டு ஆச்சரியப்பட, கொலு மண்ட பங்களைக் காண, கோட்டைகளின் மீதேறிக் காட்சி தர, கோலாகல வரவேற்பு வைபவங்களில் கலந்துகொள்ள - இன்னோரன்னவற்றுக்கெல்லாம், நேரு பண்டிதருக்கு நேரம் கிடைக்கிறது. இவர் இத்தகைய காட்சிகளைக் கண்டு களித்திடும் ஏற்பாடுகளைச் செவ்வனே செய்துதர ஏற்ப டும் செலவு பெரும் பாரமாகிறது - எனினும், எற்றுக்கு இந்த ஆடம்பர ஆரவாரம், பயனற்ற படாடோபம், பாமரரை வஞ்சிக்கும் பகட்டு, பணம் பாழாகும் விழாக் கள், என்று எண்ண மறுக்கிறார்கள்; துணிந்து எவரேனும் கேட்டாலோ, ஏடா! மூடா! என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்? எங்கள் நேருவுக்கு இதுவும் செய்வோம், இதற்கு மேலும் செய்வோம்! என்று கூறி மிரட்டுகிறார்கள்.