பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201

. 201 நேருவுக்காக நடத்தப்படும் பவனிகள், வைபவங்கள் வரவேற்புகள்,கொண்டாட்டங்கள், கோலாகலங்கள்போன்ற வைகள், வெள்ளைக்காரன் காலம் தொட்டு இருந்து வருகிற ஏகாதிபத்திய முறையாகும்! அன்று ஏகாதிபத்திய முறை யினைக் கண்டித்தவர்கள், இன்று அதே முறையைக் கையாண்டு, களிப்பும் பெருமையும் அடைகிறார்கள். அன்றும் இன்றும், ஏழை கண்ணீர் வடித்த வண்ணமே இருக்கிறான்! தம்பி. ஒரு கதை உண்டு. பரம ஏழையாக இருந்த ஒரு வன், தேவாலயத்தின் அருகே பாதையில் நடந்து, பிச்சை எடுத்துக்கொண்டிருந்தானாம்! கந்தல் ஆடை, கையில் திரு ஓடு, கண்ணில் காமாலை, கைகால்களில் புண்-இந்தக் கோலத் தில். ஆண்டவனின் அடிபணிந்து அர்ச்சித்து அபிஷேக ஆராதனைகள் செய்வித்து அருளைப் பெறுவதற்காகப் பிரபுக் கள் பட்டுடை அணிந்து, பளபளக்கும் அணி பணி பூண்டு, பொன்னவிர் மேனியரோடு வண்டி வாகனங்களில் செல்வர்; இதைக் கண்ட பிச்சைக்காரன், மனம் நொந்து, "ஆண்ட வனே! ஏதோ என்னை இல்லாதவனாகவும், இவர்களைச்சீமான் களாகவும் படைத்துவிட்டாய். அதுவே அக்ரமம். அது போ தாதென்று, இருவருக்கும் பொதுவாக ஒரு பாதையையும் அமைத்திருக்கிறாயே. ஏழைகள் செல்வதற்கு ஒரு பாதை, சீமான்கள் பவனிக்காக மற்றோர் பாதையாவது அமைத்திருக் கக் கூடாதா?என் கண்ணிலே, இந்தப் பளபளப்பும் மினு மினுப்பும், தகத்தகாயமும் தெரியாமல் இருந்தாலாவது, வேதனை குறையுமே!" என்று சொல்லிக் கொண்டானாம். எப்படியோ, அவன் ஒருபெரும் சீமானாகிவிட்டான்பட் டுடை! பரிமளகந்தம்! பல்லக்கு! பாவையர்! எல்லாம் கிடைத்துவிட்ட நிலை! பல்லக்கில் செல்கிறான், பரம ஏழை யாக இருந்தவன், 'பரம்பொருளின்' அருள் பெற! பாதை யிலே, பஞ்சை பராரி, ஏழை, நடைப்பிணம், கண்டான்! கண்களை இறுக மூடிக்கொண்டு, கலக்கத்துடன், "கடவுளே! இதென்ன கொடுமை? ஏன் இப்படிப்பட்ட (கோரம் மான காட்சி என் கண்ணில் படும்படி செய்கிறாய்! நான் என்ன குற்றம் இழைத்தேன்! இறைவா? இந்த ஜென்மங்கள் எமது கண்களிலே தெரிந்து :இதயத்தைத் தாக்காதிருக்கும் வண்ணம், இதுகளுக்கென்று ஒரு தனிப் பாதையும், உன் அருளைப் பெற்ற எமக்கென்று ஒரு தனிப் பாதையும், அமைத் துத்தரக் கூடாதா!" என்று இறைஞ்சினானாம். பஞ்சை பிரபுவானதும், பஞ்சைகளைப் பார்ப்பதும் வேதனை என்று எண்ணுகிறான் -அதற்காக ஆண்டவனிடம் கோபித்துக்கொள்கிறான்| அ.க-13