பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

204 காரின் மடைமை, ரஷிய உபசாரத்தின் இனிமை, இவைபற்றி எல்லாம் பேசப் போகிறார்! ஏழ்மை, அறியாமை, மார்க்கத் துறையிலே உள்ள மடைமை, திராவிடத்துக்கு இழைக்கப் பட்டுள்ள கொடுமை இவைபற்றிப் பேசிட முன்வாரார்- இவை பற்றிப் பேசுவோர்மீது சினம் கொட்டத் தவறமாட் டார்! சிறுபிள்ளைத்தனம் பைத்யக்காரர்கள் அர்த்தமற்ற ஆபாசம் என்றெல்லாம் ஏசுவார்! எதிர்ப்புகளை அழித்தொழிப் போம் என்று எக்காளமிடுவார்! பண்டிதரைக் காணச் செல்லும் பெருங்கூட்டமும்,அவருக் குப் பாரிலே கிடைத்திடும் புகழ் மாலை, அவருக்காகப் பிற நாட்டார் நடத்திய விருந்துகள், வைபவங்கள், அறுபதைத் தாண்டியவர் இருபதுவயது வாலிபர் என உற்சாகமாகக் காணப்படும் காட்சி, அவருடைய மேனியிலே தெரியும் மினு மினுப்பு,கண்களிலே உள்ள குறுகுறுப்பு, ஆகியவை பற்றிப் பேசி மகிழ்வர்--அவரிடம் தான் இந்திய பூபாகம் எட்டு ஆண்டுகளாக ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே மக்க ளின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் பொறுப்பாளர் அவரே! அந் நிலையில் உள்ளவர், இவ்வளவுகவர்ச்சி பெற்றவராக இருந்தும் மக்களைச் சொக்கிடச் செய்யவும் பிற அரசுகளின் நேசத்தைப் பெறவுமான திறமை இருந்தும், அவருக்கு, எதிர்ப்பு என்பது உருவான முறையில் எங்கும் இல்லாதிருக்கும் நிலையில், நாட்டி னுக்கு எந்த அளவுக்கு வாழ்வளித்திருக்கிறார் - வறுமையை ஓட்டிட,வாட்டத்தைப் போக்கிட, அறியாமையை அகற்றிட இல்லாமையை ஒழித்திட என்னென்ன காரியங்களில் ஈடுபட் டார், என்ன சாதித்துள்ளார் என்பது பற்றி, எண்ணிடப் போவதில்லை - காட்சியில் சொக்கி நிற்பர்! மறுக்க முடியாத உண்மை ஒன்று இருந்திடக் காண்கிறோம் - காந்தியாருக்குப் பிறகு, பாமர மக்கள், நேரு பண்டிதரிடம்தான், அளவற்ற பாசம் கொண்டுள்ளனர். இந்த அளவுக்கு, பாமரரின் பாசத் தைப்பெற்றுள்ள தலைவர்கள், இன்று இங்கும் சரி, வெளிநாடு களிலேயும் சரி, அதிகம் பேர் கிடையாது! நேரு பண்டிதரைக் காணும்போது, உவகை கொண்டு நமது மக்கள்முகமலர்ச்சியு டன்அவரை வரவேற்கத் திரண்டிடுவதுபோல, ஈடனுக்கோ, ஐசனவருக்கோ,அவர் தம் நாட்டிலே உண்டா என்பதுகூடச் சந்தேகம் தான். திறந்த காரில் நின்ற வண்ணம் தெருவின் இருமருங்கிலும் ஆர்வத்துடன் ஆயிரக்கணக்கான ஆடவரும் பெண்டிரும் முதியவரும் சிறாரும் அணிவகுத்து நிற்கும் காட் சியைக்கண்டு புன்னகைகாட்டியும் பூச்செண்டுவீசியும், நேரு