பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205

203 பவனி வருவதுபோல ஈடனும் பிறரும் பவனி வருவதில்லை. அந்த நாடுகளிலெல்லாம் மக்கள், உற்சவம் கொண்டாடும் கட்டத்தைக் கடந்து விட்டனர்; இங்கு உற்சவம் விமரிசை யாக நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. பல திருவிழாக் களிலே, நேரு பவனியும் ஒன்றாகக் கருதப்பட்டு, விழாக் காட்சிகளிலே கவர்ச்சி கண்டு, அதோ பார் பொய்க்கால் குதிரை, இதோ பூத நடனம், அதோ கொம்பு ஊதுகிறார்கள், இங்கே பார் கோணங்கி கூத்து, என்று சுட்டிக்காட்டிசிரித்து மகிழ்வதுபோல, அதோ பார் நேரு சிரிக்கிறார், ஆமாம், ஆமாம், எதையோ உற்றுப் பார்க்கிறார், மாலையை வீசுகிறார் பார் மாதர் பக்கமாக, மகள் இந்திரா நேருவின் முகம் மலர் கிறது பார், அதோ அந்த மோடாரில் கேவல்சிங், இது கிளப் வாலா, அந்த ப்யூக்கில் இருப்பவர்தான் காமராஜர் என்று காட்சிகளைக் காட்டி காட்டிப் பேசி மகிழ்கிறார்கள், இவ்வளவு நேசத்தையும் பாசத்தையும், உற்சாகத்தையும் உற்சவத்தை யும் பெறுகிற நேரு பண்டிதரால், இதோ வறுமையை ஒழிக் கும் திட்டம், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் வழி, புதிய தொழிற்சாலைகள், வாழ்வுக்கு புதிய வசதிகள், தரு கிறேன் மகிழ்ச்சி பெறுவீர்!..... என்னிடம் இத்துணை அன்பு கொண்ட நண்பர்களே! நம்பிக்கை வைத்திருக்கும் நல்லவர் களே! உங்கள் நல்வாழ்வுக்காக நான் சாதித்துள்ள காரியங் களின் பட்டியலைக் கூறுகிறேன் கேண்மின் என்று எடுத்துக் கூறுகிறாரா, கூற முடிகிறதா, கூறும் வழி இருக்கிறதா, என்றால்? இல்லை, இல்லை, அதுதான் இல்லை. அன்பு சொரிகி றார்கள் மக்கள் ; அகமகிழ்கிறார் நேரு. பிறகு அகில உலகச் செய்திகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துக் கூறி விட்டு, ஆகவே 'ஜெய் இந்து' என்று முழக்கமிடச் சொல்லி விட்டுப் போய்விடுகிறார் - திருவிழாக் கோலம் கலைகிறது, தெருக்களில் எப்போதும் போலத் திகைத்தவன், தத்தளிப் பவன், வாழ்க்கைக்கு வழி தேடி அலைபவன், வறுமையால் வாட்டப்படுபவன்! மாடென உழைத்திடும் மனிதஉருவங்கள், வாலிபத்தை வயோதிகமாக்கிக் கொண்ட வறுமையாளர்கள், பிணிகொண்டோர் பிச்சைக்காரர் ஆகியோர் ஊர்ந்து சென்ற வண்ணம் உள்ளனர். கண்ணீர் வற்றிவிடவில்லை; கை பிசைந்து கொள்வது நின்று போவதில்லை. கண்டோம் களித்தோம் நேரு பண்டிதரை, நமக்குற்ற இன்னல் ஒழிந் திடக் கண்டோம், இன்பம் பெருகிடக் கண்டோம், இதனை நமக்கு அளித்திட்ட ஏந்தலைப் போற்றுதும், அவர் ஆட்சியின் மாட்சியைப் போற்றுதும், என்று கூறிட மக்களால் முடிய வில்லை! பாமரரின் நிலைஇதுஎனின், இந்தியப் பேரரசு எந்த முறை யில் நடத்தப்பட்டுவருகிறது, எவ்விதமான எதேச்சாதிகாரம்