பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

206 கொழுந்து விட்டு எரிந்து ஜனநாயக மலரினைக் கருக்கி விடு கிறது?எத்தகைய அடக்கு முறைகள் அவிழ்த்து விடப்பட்டி ருக்கிறது, அதன் விளைவாக விடுதலை வேட்கையும் உரிமை ஆர் வமும் கொண்டவர்கள் எவ்வளவு கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர்? தீட்டப்படும் திட்டங்களிலே உள்ள தவறுகளை எடுத்துக் காட்டுவோரும், அவை நிறைவேற்றப்படுவதிலே ஏற்படும் ஒழுங்கீனங்களைச் சுட்டிக் காட்டுவோரும் எவ்விதம் அலட்சியப் படுத்தப்படுகிறார்கள், ஆட்சி முறையின் காரண மாக ஏழை மேலும் ஏழை ஆக்கப்படுகிறான்? இலட்சாதிகாரி கோடிஸ்வரனாகிறானே, முறையா, என்றுகேட்போர் மீதுகண் டனம் எப்படி வீசப்படுகிறது என்பனவற்றை அறிந்துகொள் ளும் அளவுக்கு அரசியல் அறிவு படைத்தவர்களோ, நேரு வின் பவனியிலே உள்ள கவர்ச்சிக்கும் நாட்டு மக்களுடைய வாழ்வின் முன்னேற்றத்துக்கும் ஒருதொடர்பும் இல்லை என்ப தைத் தெரிந்து கொண்டுள்ளனர் எனினும் அந்தப் பெருங் கூட்டம், விழாக்கோலம், கவர்ச்சி ஆகியவைகளைக் கண்ட தும் திகைப்புற்று, இவ்வளவு மகத்தான செல்வாக்குப் பெற் றிருக்கும் பெருந்தலைவரை, மக்களை மயக்கும சக்தியை இந்த அளவுக்குப் பெற்றுள்ள நேரு பண்டிதரை, அண்டிப் பிழைத் தால்தான் வாழ்வு, எதிர்த்தாலோ, மூலையில் தள்ளப்பட்டு விடுவோம் என்று அஞ்சி, அவர்களும் கோலாகலத்திலே கலந்து கொள்வதே சாலச் சிறந்தது என்று எண்ணி விடுகி றார்கள் காங்கிரஸ்காரர்களோ, பெருமழை பெய்து, தெரு வெல்லாம் தண்ணீர் ஆகிறன ஓடும்போது, பாதையிலே இருந்த ஆபாசங்கள் அடித்துக்கொண்டு போகப்பட்டுத் தெரு துப்புர வாவது போல, நேருவின் பவனியால் ஏற்படும் உற்சாக வெள்ளம், காங்கிரசாட்சியினால் ஏற்பட்டுள்ள அல்லலை, அவதியை, அதிருப்தியை, அவலட்சணத்தை, எதிர்ப்பை, எரிச்சலை, ஒரே அடியாகத் தள்ளிக் கொண்டு போய்விடும், எங்கும் காங்கிரஸ் கடசியின், மதிப்பும் செல்வாக்கும் ஓங்கித் தழைத்திடும், மாற்றார் உற்றாராவர் உற்றார் துள்ளிக் குதிப்பர், ஊராளும் முறையினால் ஏற்பட்ட உற்பாதங்களையும் மறந்து மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு தருவர், அன்பினைச் கிறார்கள். உவகையால் சொரிவர் என்று எண்ணிக் கொள் இவர்களின் அச்சத்துக்குக் காரணம், நேருபண்டிதரால் பாமரரைப் பெருமளவுக்குத் திரட்ட முடிவதால், அவருடைய செல்வாக்கை எதிர்த்தால், மக்கள் தம்பால் கசப்படைவர் என்பதுதான். இன்றைய நிலையைத்தான் இவர்கள் எண்ணிப் பார்க்கிறார்களே தவிர, உண்மையை எல்லா மக்களும் உணர்ந்து, நாம் வஞ்சிக்கப்பட்டோம் இம்சிக்கப்பட்டோம் மாற்றப்பட்டோம் என்பதை அறிந்து கொதித்தெழப்