பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

209 தவிர, ஆளைக் கொல்லும் 'சக்தி' இல்லை, தோட்டாக்களுக்கு! துப்பாக்கிகள், பார்வை அளவில் நேர்த்தியாகவே உள்ளன! ஆனால் அவைகளை நம்பிக் களத்திலே கடும்போரில் ஈடுபடச் சென்ற படை வீரர்களை, காட்டிக் கொடுத்துவிட்டன/வெடிக் கின்றன, ஆட்களைச் சாகடிக்க மறுக்கின்றன! தோட்டா இல்லாத துப்பாக்கி என்று கேலி மொழி பேசு வர்! தோட்டாவும் துப்பாக்கியும், பலாத்காரச் செயலிலே ஈடுபட மறுத்திடும் நிலைக்கு' என்ன கூறுவது? கண்டனர் எதிரிகள்- 'வெத்து வேட்டுகளை'த் தாக்கினர் கொன்று குவித்தனர்! வீரம் இருக்கிறது நிரம்ப, ஆனால், வீரர்களை, இந்தக் கதிக்கு ஆளாக்கிற்று. 'வஞ்சகம்' அந்த நம்மை நாசமாக்கும் எதிரி, இங்கே இல்லை, களத்தில் இல்லை,அவன் நம் நாட்டிலே இருக்கிறான். அரண்மனையில் அழகிகளின் ஆலிங்கனத்தில் சுகமனுபவித்துக் கொண்டிருக் கிறான். நம்மைக் களம் சென்று கடும் போரிடும்படி கட்டளை யிட்ட காவலன், கட்டழகிகளைத் தொட்டிழுத்து-முத்தமிட்டு மகிழ்கிறான் - தொலையட்டும் - இதழ்கொத்தி இன்புறுகிறான் ஒழியட்டும் - கொய்யாக் கனிகளின் கோலாகலத்திலே தன்னை மறந்து கிடக்கிறான் - கிடக்கட்டும் காமாந்தகாரன்-ஆனால் நம்மிடம் அவன் தந்தனுப்பிய போர்க்கருவிகள் இப்படியா இருப்பது! ஆளைச் சாகடிக்க முடியாத ஆயுதமா! வெடிச் சத்தம் கிளம்புகிறது. எதிரியைச்சாகடிக்கும்சக்தி காணோமே! வெத்து வேட்டுகளைக் கொடுத்தா, வெஞ்சமருக்கு நம்மை அனுப்புவது? மாற்றானிடம் காட்டிக் கொடுத்தானே, மன்ன வன் என்ற பட்டம் பெற்றுக் கிடக்கும் அந்த மாபாவி! என்று கொதித்துக் கூவினர். களத்தில் பிணமலை! இரத்தமும் கண் ணீரும் பீறிட்டெழுந்த நிலை. வஞ்சகத்தால் வீழ்ந்தோம், எதிரி யிடம் ஒரு எத்தனால் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டோம். சித்திரவதைச் சாவடிக்கு நம்மைத் துரத்திவிட்டு. சிற்றிடை யாளுடன் சித்திர மண்டபத்தில் காதல்சிந்துபாடிக் கொண்டி ருக்கிறான், மாமிசமலை. தாயகமே! உன் பொருட்டு எதையும் இழக்கத் தயங் கோம். இன்னுயிர் தரத் தயார். ஆனால் எமது உயிர் பிரியு முன், தாய் நாடே! உன்னை இழிவு படுத்தக் கிளம்பும் எதிரி யின், உயிரைக் குடித்திட வேண்டாமா; போரிட்டு மடியத் தயார், அன்னையே!போரிட்டு மடியச் சித்தமாக இருக்கிறோம், ஆனால்,இதோ பாரும், எமக்குத் தரப்பட்டுள்ள போர்க்கருவி களை! வெத்து வேட்டுகளை! எதிரியிடம் எங்களைக் காட்டிக் கொடுக்கும் கருவிகளை!