பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215

215 1948-லிருந்து 1952 வரையில் வாடகை தந்திருக்கிறார் கள் - ஒருநாள் கூட அதிலே வாழவில்லை! தபால் தந்தி இலாகா அலுவலத்துக்காகத்தான் (பிரம் மாண்டமான இரண்டு கட்டிடங்களை வாடகைக்கு எடுத்த னர்; ஏற்கனவே உள்ள அலுவலக் கட்டிடம் கலனாகி விட்ட தால், புதுப்பித்துக் கட்டத் திட்டமிட்டனர். புதிய கட்டிடம் எழும் வரையில் வாடகைக் கட்டிடம் தேவைஎன்றுஎண்ணி, பெரிய மாளிகைகள் இரண்டை வாடகைக்கு எடுத்து, ஒழுங் காக, வாடகைப்பணம் செலுத்தி வந்தனர்; அவ்விதம் செலுத் திய வாடகைப் பணம் தான் நாலு இலட்சத்து அறுபதினாயி ரம். ஆனால் திட்டமிட்டபடி, பழைய கட்டிடத்தை இடிக்கவு மில்லை, வாடகைக் கட்டிடத்துக்கு அலுவலகத்தார் குடிபோக வுமில்லை.வாடகைப் பணத்தை மட்டும்கட்டிக்கொண்டுவரத் தவறவில்லை! ஏறக்குறைய ஐந்து இலட்ச ரூபாய் வாடகை செலுத்தியான பிறகு, கணக்கு ஆய்வாளர் பார்த்து, வீணாக ஏனய்யா வாடகை தருகிறீர்கள் என்று கேட்ட பிறகுதான், இந்திய சர்க்காருக்கு, காலியாக இருக்கும் கட்டிடத்துக்கு வாடகை செலுத்தி வந்த ஏமாளித்தனம் தெரிந்தது தெரிந்து? ஐந்து இலட்சம் கரைந்தது. இவ்விதம் பாழான பணம், கோணலாகிப் போன திட்டம், நாற்றமடிக்கும் ஊழல், வளர்ந்தபடி இருக்கக் காண்கிறோம். வெட்கமின்றி அமைச்சர் சொல்கிறார் 'தாங்கிக்கொள்ள வேண்டும்' என்று ஊழல்கள் பெருகிய வண்ணமுள்ள பண்டிதரின் உலாவோ, நடந்தபடி இருக்கிறது!? 2 2-10-1955. அன்புள்ள, Jimmy wa