பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

கடிதம்: 22 தம்பி, ஆரியம் இருக்கும் இடம்! 'விடுதலை'யில் ஆரியர் பற்றிய செய்தியும், அரசும் - சென்னை அரசு போஸ்டர் வாபஸ் பெற்றமை. ஆரியரை நடுத்தெருவில் நாள் முழுதும் போட்டு உதைத்தாலும் கேட்பதற்கு இன்று நாதி கிடையாது! என்ன அண்ணா! இப்படி ஒரே போடு போடுகிறாயே! இவ்விதமெல்லாம் கூறும் வழக்கமோ -கருதும் சுபாவமோ கிடையாதே, என்ன காரணம் இவ்வளவு மோசமான நடை யிலே பேச, என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா, உனக்கு. பலே! பலே! இது ரோஷமான பேச்சு! இது வீரனின் முழக்கம்! இவ்விதம் பேசினால்தான் பிரச்சினை தீருமே தவிர, மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா? என்று கேட்டுக் களிப்பால் துள்ளிக் குதிப்போரும் இருக் கிறார்கள். . தம்பி ! நீ கலக்கமடையவும் காரணமில்லை, அவர்கள் களிப்படையவும் தேவையில்லை .ஏனெனில், ஆரியரை நடுத் தெருவில் நாளெல்லாம் போட்டு அடித்தாலும் இன்று கேட்ப தற்கு நாதி இல்லை என்ற மணிவாசகம் என்னுடையது அல்ல!' 'விடுதலை'யில் வெளிவந்த வீர முழக்கம் அது; 28-9-55-ல்!! அக்ரகாரங்கள் இந்த வீராவேச உரை கண்டதும் இடி கண்ட நாகமாக வேண்டுமென்று எண்ணினாரோ, அல்லது படை வீரர்களுக்குச் சிறிதளவு உணர்ச்சிப் பானம் கிடைக்கட்டும் என்று கருதினாரோ, எதற்காக இவ்விதம் தீட்டினாரோ, நானறியேன் - ஆனால் ஆரிய இனத்தை நடுவீதியில் போட்டு அடித்தாலும் ஏன் என்று கேட்க நாதி இல்லை என்று எழுதியவருடைய 'கைவலி' தீரு வதற்கு முன்பே, நாடாளும் காங்கிரஸ் தலைவர்கள், ஆரிய ரின் முகம் சிறிதளவு சுளித்துவிடுகிறது என்று தெரிந்ததும், நடு நடுங்கிப் போகிறார்கள் எனும் உண்மை, இப்போது தெரி கிறது.