பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

220 ஆரியருக்கு நாதி இல்லை, - இந்தப் பேருண்மையை நாட்டுக்கு அளிக்கிறார். நாதி இல்லை என்பதை விளக்க உதாரணம் தருகிறார், ஆரியரை அடித்தாலும் கேட்க ஆள் இல்லை-என்று கூறு கிறார். சந்து முனையில், இருட்டு வேளையில், ஒண்டி சண்டியாக வரும் ஆரியரை அடித்துவிட்டு ஓடிவிடும் அற்ப காரியத்தை அல்ல அவர் கூறுவது, வாசகத்தைக் கவனி, தம்பி! நடுத்தெருவில் நாள்முழுதும் போட்டு உதைத்தாலும் கேட்பதற்கு இன்று நாதி கிடையாது? நாள்முழுதும்! இதற்குக் காரணம், ஆரியர் செத்த பாம்பு ஆனது! ஆரியர் செத்தபாம்பு ஆனதற்குக் காரணம், இயக்கம்! சு.ம. சரி ! தம்பி! இப்படி வாதம் நடத்திப்பார். சு.ம. இயக்கத் தின் பலனாக ஆரியர் செத்தபாம்பு ஆகி விட்டார்களென்றால், செத்தபாம்பை அடிக்கக் கிளம்புவானேன். நடுத்தெருவில், நாள் முழுவதும் செத்தபாம்பைப் போட்டு அடித்துக் கொண்டு கிடப்பானேன்! கோபத்தால் ஒரு தாவு தாவுவார் நண்பர், இவ்விதம் வாதாடினால். எனவே அவருக்கு அல்லல் வேண்டாம், அந்த வாதத்தை இந்த அளவுடன் நிறுத்திக்கொள்வோம். நாதி இல்லை என்கிறாரே, அது பொருந்துகிறதா, என்று இந்தக் கிழமை சட்டசபை நடவடிக்கையைப் படித்துவிட்டு எனக்குக் கூறு தம்பி ! நடுத்தெருவில் நாள் முழுவதும் அடித்தாலும், கேட்க நாதி இல்லை என்ற அரிய உண்மையை, செயல்மூலம் செய்து காட்டிடும், அரும்பெரும் காரியத்தை அவர்கள் செய்யவிட்டு விடு- அவர்களுக்கே அந்த ஏகபோக உரிமை இருக்கட்டும்! ஆரியரை இப்போது யாரும் அடிக்கவில்லை! சர்க்கார் சில பிரச்சாரத் தாட்களை அச்சடித்தனர். நாதி இல்லை! நண்பரின் திருவாக்கல்லவா இது! சர்க்கார், அச்சடித்தார் கள், ஆரியர் எச்சரித்தார்கள்; சர்க்கார் அச்சடித்ததை அழித்தொழித்தார்கள். நடுவீதியில் நாளெல்லாம் போட்டு அடித்தாலும் கேட்ப தற்கு நாதி இல்லா நிலைக்கு இது எடுத்துக்காட்டா, தம்பி! எண்ணிப்பார்! தீண்டாமை ஒழிப்பு சர்க்கார் திட்டத்திலே ஒன்று-மிக முக்கியமானதுங் கூட! அரசியல் சட்டம் இதை வலியுறுத்து