பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

225 எட்டிப் போடா சூத்திரப் பயலே!- என்ற ஐயர் பேச்சும் ஆரியம்தான்! கிட்டே வராதே சேரிப் பயலே! என்று பேசும் முதலி யார் முடுக்கும் ஆரியம்தான்! படையாச்சிக்கு இவ்வளவுஉயர்வா? என்றுகேட்கும் பேச்சும் ஆரியந்தான்! மறவர் முன்பு மட்டு மரியாதையோடு நட! தேவர் வருகிறார், எழுந்து நில்! நாடார் அழைக்கிறார், ஓடிவா! செட்டியார் கேட்கிறார், தட்டாமல் கொடு!- என்று ஆரியம், பலப்பல முறைகளிலே தலைவிரித்தாடுகிறது, தம்பி, பல முறைகளில்! ஆரியம், ஒரே இடத்தில், ஒரே கூட்டத்தாரிடம், ஒரே முறையில் இருக்குமானால், அந்த ஒரு இடத்தை, ஒரு கூட்டத்தை,ஹிட்லர், யூதர்களைவிரட்டினானே, அதுபோலச் செய்துவிடவேண்டும் என்று பேசுவது, ஓரளவுக்காவது பொருத்தமானதாகத் தெரியக்கூடும். ஆனால், ஆரியம், இருக்கும் இடம், அக்ரகாரம் மட்டுமல்ல! பாரேன், தம்பி! ஆரிய ஆச்சாரியார் விலகினார், திராவி டக் காமராஜர் வந்தார் என்று, 'உருவம்' கண்டு உள்ளம் பூரித்துக் கிடந்தது என்ன ஆயிற்று! ஆரியம் திராவிட உரு வினர் ஆட்சியிலும் இருந்துகொண்டு, வெற்றி! வெற்றி! என்று கொக்கரிக்கிறதே! எனவே, நமது மணி தம்பி! அக்ரகாரத்தை நோக்கிப் படை எடுத்து அதை 'பஸ்மீகரம்' செய்துவிடப் போவதாகக் கூறிவருவது அல்ல; ஆரியம் இருக்கும் இடம் எல்லாம் அறிவு சுடர்கொளுத்தி அதன்மூலம், ஆரியத்தை ஒழிப்பதுஆகும்! உடல் படபடவென ஆடாது. உள்ளம் 'கிடுகிடு' வெனக் குதிக்காது! பேச்சிலே, எள்ளும் கொள்ளும் வெடிக்காதே!-- இந்தத் திட்டத்தில் என்பார்கள்-ஆனால், வெற்றிக்கு வழி நாம், கொண்டிருப்பதுதான், அது இராயபுரத்து ‘அரை டஜன் சிறுவர்கள் தீட்டியதுமல்ல, பெரியார் திட்டம்!! 9-10-1955 அன்புள்ள, தந்த Jimmym