பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229

229 போதுமல்லவா!) எதிரே யார் வந்தாலும், கன்னத்தில் ஒரு அறை கொடுப்பானாம். பற்கள் முப்பத்து இரண்டும் பொல பொல வெனக் கீழே உதிர்ந்து போகுமாம். அப்படிப்பட்டவ னிடம் அந்த ஊரிலேயே, தொடை நடுங்கி' என்றுயாவராலும் எள்ளி நகையாடப்பட்டு வந்த ஒருவன், சென்றானாம் - சவா லுக்கு! ஒரு நாள் ! ஊரே அதிசயப்பட்டது! ஒருமணி நேரத் துக்கெல்லாம், வெற்றி! வெற்றி! என்றுகூவியபடி, ஊருக்குள் வந்தான். வந்தவனை ஊரார் சூழ்ந்து கொண்டு என்ன சேதி! என்ன சேதி! என்று ஆவலோடு விசாரித்தனர். அவன் பெருமையாக என்னை அவன் அடிக்கவில்லை! என் பற்களை உதிர்க்கவில்லை என்று சொன்னானாம்! "எதிர்ப்பட்டவர்களை எல்லாம் கன்னத்தில் அடித்து பற் களை உதிரச் செய்பவன், உன்னைமட்டும், சும்மாவிட்ட கார ணம் என்ன?" ஊரார் கேட்கிறார்கள்! காரணமா? என் சாமர்த்தியம்தான்!" தொடை நடுங்கி. என்றான் "என்ன நடந்தது! எப்படி அவனைச் சமாளித்தாய்? விவர மாகச் சொல்லும் என்று கேட்டனர் ஊர் மக்கள். அவன் சொன்னான். "நேராக அவனிடம் சென்றேன். கன்னத்தில் அடிக்க கையை ஓங்கினான்! நிறுத்து! நிறுத்து! உன்னால் என்னை அடித்து, என் பற்களை உதிர்க்க முடியாது என்றேன்.என்ன சொன்னாய்! என்ன சொன்னாய்! என்று அவன் கொக்கரித் தான், நீ கொக்கரித்து என்ன பலன்? நிச்சயமாகச் சொல் கிறேன் உன்னாலே, என் பற்கள்உதிரும்படி அடிக்கமுடியாது! பந்தயம் கட்டுகிறேன் என்றேன். அவனுக்குப் பிரமாதமான கோபம், அடே அற்பப்பயலே! சுருள் கத்திசுப்பன், அரிவாள் கந்தன், சம்மட்டி சதாசிவம் போன்ற சூரனெல்லாம், என் 'அறை' பட்டதால், 'பொக்கை' வாயர்களாகிப் போனார்கள்! நீ சுண்டைக்காய்! என் முன்னாலே சூரத்தனமா பேசுகிறாய்! என்று மிரட்டினான், கண்களை உருட்டினான், நான்; "அப்பா நீ அசகாயச் சூரனாக இருக்கலாம்! நீ கொடுத்த அறையிலே, வீராதி வீரனுக்கெல்லாம் பல் போயிருக்கலாம். ஆனால், என்னை அறைந்து என் பற்களை உதிரச் செய்யமட்டும் உன் னாலே முடியாது; இது உறுதி - என்ன பந்தயம் வேண்டுமானா லும் கட்டுகிறேன்" என்றேன். அவனுக்குத் தலைகால் தெரி யாத கோபம் வந்து விட்டது—“ஆஹபைந்தயமா உன் பற் களை என்னால் உதிர்க்க முடியாமல்போனால், இனி ஒருவனையும் நான் கன்னத்தில் அடிப்பதில்லை!- என்றான், சத்தியமாகவா என்றேன். ஆமாம், என்று கூறிவிட்டு கையை ஓங்கினான்.