பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231

231 மைகள், ஆதிக்கம், என்பதை எல்லாம், காட்டாமல், மதம் என்றால் உண்மையை உணருவது, நற்குணத்தை நாடுவது, அழகை அடைவது என்று கூறினார். கூறவே, இதுதானா, மதம், இம்மதம் எமக்கும் சம்மதமே என்றனர், லெனின் கிராடு மக்கள். சத்தியம் - சன்மார்க்கம் - அழிவில்லா அழகு! இதை யார் இல்லை, என்பர். எவர் வேண்டாமென்பர்! உண்மையை உணரவும், உத்தமனாக வாழவும் வழி வகுப்பதே மதம் என்று கூறுவதை யார் மறுப்பர்! லெனின் கிராடு வாசிகளிடம், 'மதம்' - பாரதத்தில் என்னென்ன (வடிவம் கொண்டு இருக் கிறது,என்னென்ன நினைப்புகளுக்கு இடமளிக்கிறது,எவ்வித மான நடவடிக்கைகளைச்செய்யச் செய்கிறது என்பனவற்றை விளக்கி,சித்தரித்துக் காட்டிவிட்டு, இதுதான் மதம், எமது மதம், எமது முன்னோர்கள் காலமுதல், சிதையாமல் இருக்கும் மதம்,என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் பேசிவிட்டு, பிறகு, மதம் வேண்டுமா? என்று கேட்டிருந்தால், தெரிந்திருக்கும், வேடிக்கையாகவும் இருந்திருக்கும் பற்களோடு போயிருந்தா லல்லவா, தெரிந்திருக்கும் - கதையில் நாம் கண்ட 'தொடை நடுங்கி' அவன்தான், பற்களை ஏற்கனவே அவனைப் பதி யாகக் கொண்டிருந்த பஜாரிக்கு அர்ப்பணித்து விட்டானே. டாக்டர் இராதாகிருஷ்ணன் போன்றவர்கள், ஊரும் உலகமும் தம்மையும் தமது திறமையையும் மெச்சும்படியாக நடந்து கொள்வதற்காக, அங்கெல்லாம் சென்று, மென்றால், அன்பு அறிவு உண்மை பண்பு அழகு மத என்றெல்லாம், பேசிவிடுகிறார்கள், இங்கு அவர்கள்காண் பது என்ன? ஆமை அனுமான் வராகம் காளை போன்ற வாகனாதிகளிலே ஏறும் சாமிகள்! அவைகளைச் சுமந்து, 'காப்புக் காச்சி' போல உடலம் படைத்தவர்கள்! மேலே அமர்ந்து மேனியில் பூசப்பட்டுள்ள சந்தனக் குழம்பை 'விசிறி' ஆறவைக்கும் விப்பிரர்.