பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

234 யில் காரியமாற்ற முன்வராமல், "கொதிப்பா? கொந்தளிப்பா? சரி! சரி! சரியான முறையிலே போலீஸ்பாதுகாப்பு அமைத்து, பயல்களின் கொட்டத்தை அடக்கிவிடு!- என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது டில்லி. ஆமாம், தம்பி! டில்லி சர்க்கார் மாகாண சர்க்கார்களுக்கு அனுப்பியுள்ள 'தாக்கீதின்' கருத் தினைத்தான் நான் துவக்கத்திலே குறித்திருக்கிறேன். நேரு பண்டிதரின் நேர்த்தி மிக்க குணங்களைப் பாராட்டி அவருடைய 'பவனி'யைக் கோலாகலமான விழாவாக்கிக் கொண்டாடி, மகரதோரணம் கட்டி, ஊரெல்லாம் அழகாக்கி, பாதைகளைச் செப்பனிட்டு, மரங்களுக்கும் சாயமடித்து, மட் டற்ற உற்சாகத்தோடு மகோற்சவம் கொண்டாடினார்களே, அந்த மக்களுக்கு - ஏலக்காய் மாலையும், பொன்னாடையும், ரோஜாவும், மல்லியும், வரவேற்பும் வாழ்த்தும் பெற்றுக் கொண்டு சென்றாரே அந்தப் பண்டிதர், சுடச் சுடத்தருகிறார், உடனடியாகத் தெரிவித்துக்கொள்கிறார்,தமது நன்றியறிதலை! போலீஸ் படை தயாராக இருக்கட்டும்! யாரார், இது அறமல் லவே, அழகல்லவே என்று கூறுகிறார்களோ, அவர்கள் மீது, எங்கெங்கு ஏன் என்ற குரல் கிளம்புகிறதோ அங்கெல்லாம் போலீஸ் கண் பாயட்டும்: எங்கெங்கு மனக்குறை வெளியிடப் படுகிறதோ, அங்கெல்லாம் போலீஸ் இருக்கட்டும்; உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, எனக்கு அறிவித்து விடவேண்டும்!- என்று கூறி இருக்கிறார்! கொதிப்பும் கொந்தளிப்பும் ஏற்பட இருக்கிறது என்ப தைப் பண்டிதர் உணருகிறார்: ஏனெனில் பண்டிதரின் போக்குத்தான், இந்த கொதிப்புக்கும் கொந்தளிப்புக்கும் காரணமாக அமைந்திருக்கிறது! கொதிப்பும் கொந்தளிப்பும் கிளம்பப் போகிறது, ஆகவே போலீஸ் படைகளை அனுப்பி, அடக்கு! அடக்கு முறையை அவிழ்த்துவிடு, என்கிறார் அகில உலகிலும் பவனி வந்து சாந்தி, சமாதானம், சமரசம் போன்ற பேருண்மைகளைப் பேசிவரும், பஞ்ச சீலர்! கொதிப்பும் கொந்தளிப்பும் கொள்ளக் கூடும்-காரணம் கண்டறிக; குறை கூறுவர், சமாதானம் கூறுக; துயர் அடை வர், துயர் துடைத்திடுக!- என்று கூறுவார் எமது பண்டிதர், அதிகார வெறியும் ஆணவப் போக்கும், ஏகாதிபத்தியத் திமி ரும் கொண்டவர்களன்றோ, மக்களிடம் கிளம்பும் கிளர்ச்சி யைத் தடுக்க அடக்குமுறைவெறிநாய்களை அவிழ்த்துவிடுவர்; காலமெல்லாம் விடுதலைக்குப் போராடிய கர்மவீரன், காந்தி அடிகளின் வாரிசு, மனி தருள் மாணிக்கமாம் எமது நேருவா, வெள்ளையன் போல் வெறியாட்ட மாடுவார், என்று பேசிடும் காங்கிரஸ் அன்பர்கள், முக்காடிட்டுக் கொள்ள வேண்டிய வுகையிலே, நேருசர்க்காரின் உத்தரவு உருவெடுத்திருக்கிறது,