பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

236 வகையில், அந்தத் தந்திரத்தை நேரு சர்க்கார் கையாண்டு வருகிறது! ராஜ்ய புனரமைப்புக் கமிஷன் அமைப்பு இத்தகைய தந்திரத்திலே ஒன்றுதான்! இங்கு மக்கள், சாத்பூரா மலைச்சாரலிலிருந்து குமரி வரை யிலும், கேட்டது ராஜ்ய புனரமைப்பு அல்ல! மக்கள், கேட்பது மொழிவழி அரசு! மொழிவழி அரசுக் கிளர்ச்சி வலுப்பெற்றது; வெள்ளையர் போலவே வடவர் அழைத்துள்ள சர்க்கார், ஒரு 'கமிஷன்' அமைத்தது. கமிஷனுக்குச் சர்க்கார் இட்ட வேலை, மொழி வழி அரசு எங்ஙனம் இருத்தல் வேண்டும்என்பதல்ல;ராஜ்யப் புனரமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதாகும்! மொழிவழி அரசு என்ற மக்கள் கோரிக்கையை மதித்து அதன்படி நடத்திடத் துரைத்தனத்தார் முடிவு செய்திருப்பார் களானால், எல்லைக் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருக்க வேண் டும் ; ராஜ்ய புனரமைப்பு என்ற ஏமாற்று வேலைக்கு இடம் ஏற்பட்டிருக்காது! ஆனால் டில்லி சர்க்கார், மக்கள் குரலுக்கு மதிப்பளிக்க விரும்பவில்லை, மழுப்பவும், காலத்தை ஓட்டவும், கவனத்தை வேறு பக்கம் திருப்பவுமே விரும்பினர்: எனவேதான், ராஜ்யப் புனரமைப்பு கமிஷன் அமைத்தனர். அப்போதே இதனைக் கண்டித்தனர், விளக்கமறிந்தோர்; ஆட்சியாளர்களின் ஆதரவு தேடி அலையும் அடிவருடிகளோ, மொழிவழி அரசுபற்றி இப்போது ஏதும் கிளர்ச்சி வேண்டாம், இதோகமிஷன் அமைந்துவிட்டது; நியாயம் கிடைக்கும்; நேரு ஆட்சியிலே நீதி கிடைக்கும், என்று நல்வாக்குக் கொடுத் தனர். 'கமிஷன்' தன் அறிக்கையை நீட்டிவிட்டது; நாட்டிலே பல்வேறு இடங்களில் கொதிப்பும் கொந்தளிப்பும் கருவில் உருவாகிவிட்டன; இது தெரிந்ததும், கொந்தளிப்பு கிளம்பக் கூடிய இடங்களுக்குப் போலீஸ் படைகளை அனுப்புக! என்று டில்லி உத்தர பிறப்பித்து விட்டது!! கண் விழித்துக் கொண்டால், அவன் தலை மீது போடு வதற்கு, பாராங்கல் ஒன்றை முதலிலேயே தயாராக வைத்துக் கொள் - என்று கைதேர்ந்த திருடன், ஆரம்பக் காரனுக்குச் சொல்வானாம்!! மாகாண சர்க்காருக்கு மத்ய சர்க்கார், கூறுகிறது, மக்கள் கிளம்பினால், உடனே மண்டையிலடித்து உட்கார வைக்கத் தக்க முறையில், போலீஸ் ஏற்பாடு தயாராகட்டும் என்று!