பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237

237 கமிஷன் வெளியிட்ட அறிக்கை, நிச்சயமாகக் கொதிப் பையும் கொந்தளிப்பையும் உண்டாக்கும் என்பதை நேரு நன்றாக அறிவார்! மக்களுடைய உரிமை மண்ணாக்கப்படும் போது, நீதி புறக் கணிக்கப்பட்டு, நியாயம் நசுக்கப்படும் போது, கொதிப்பும் கொந்தளிப்பும் மட்டுந்தானா. புரட்சியே வெடித்திருக்கிறது என்பதையும், அதனை அழித்தொழித்திட போலீசும் படையும் பாய்ந்தோடித் தாக்கியும் முடியாது போயிற்று என் பதையும் வரலாற்றுச் சுவடி எடுத்துக் காட்டத்தான் செய்கிறது. எனி னும், நேரு பண்டிதர், மக்களிடம் தாம் ஊட்டிவிட்ட போலித் தேசீய அபின்' அவர்களைச் செயலாற்றவர்களாக்கி விட்டது; அவர்களுக்கு, தங்களுக்குள்ளாகவே தகராறுகளை வளர்த்துக் கொள்ளவும். சிண்டு பிடித்துச் சண்டையிடவும், சிறு மதி கொண்டு சச்சரவு கொள்ளவும்,கூடிக் கெடுக்கவும், காலை வாரிவிடவும், காட்டிக்கொடுக்கவும் தான் விருப்பமும் பயிற்சி யும் இருக்கிறதே தவிர, அவர்கள் தமக்குள் ஒன்றுபட்டுக் கொடுமையைக் களைந்திட, அக்ரமத்தை எதிர்த்திட, அடி மைத் தளைகளை நொறுக்கிட ஆற்றலுடன் போரிட மாட்டார் கள், என்று நம்புகிறார் மக்களைப்பற்றி மதோன்மத்தர்கள் கொண்ட கருத்தைத்தான் இந்த மனிதகுல மாணிக்கமும் கொண்டிருக்கிறது! எனவே தான், போலீஸ்! போலீஸ் ! ! என்று டில்லி கொக்கரிக்கிறது! மொழி வழி அரசு என்பதுஇன்று நேற்று முளைத்ததல்ல' காந்தீயக் கழனியிலே பயிரிடப்பட்டதாகும்! அதற்கும் முன்பேகூட, விடுதலைக் கிளர்ச்சிக்கான முயற்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்தே, மொழி வழி அரசு மக்கள் மன்றத்திலே உலவிற்று. பாரத மக்களே! பரங்கியின் ஆட்சியை நீக்கிட வாரீர்!- என்று மட்டும் கூறினாரில்லை, பாலகங்காதர திலகர்! - அவரு டன் இருந்தோரும் அவர் வழி வந்தோரும் விளக்கமாகவே பேசினர், மக்கள் வீறு கொண்டு எழத்தக்க வகையில் மொழி வழி அரசு அமைய வேண்டும் என்ற குறிக்கோளுடன். சுயராஜ்யப் போர்ப்படை திரட்டிப் பணியாற்றிய சோர் விலாத் தலைவர்கள், எந்தெந்த இடத்தில் எந்தெந்த மொழி யாளர்களைக் கண்டனரோ, அவர்களுடைய வரலாற்றை ஏடுத்துக் காட்டித்தான்,உணர்ச்சியூட்டினர்! சேரனும் சோழனும் பாண்டியனும் ஆண்ட செந்தமிழ் நாட்டவரே! இன்று செக்குமாடுகளென நம்மை நடத்தும் வெள்ளையன் ஆதிக்கத்தை எதிர்த்திட வாரீர்! என்று கூவி அழைத்தனர்.