பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

244 தாக முடியும். மற்றுமொன்று விளக்கமாக்கப்பட வேண் டும் --- வண்டிப் பெரியாறு கூட்டத்தில் நான் இதனை வலியுறுத் திக் கூறினேன் -மத்ய சர்க்கார் பிரித்தாளும் சூழ்ச்சியைத் திறம்பட நடத்தவே திட்டமிட்டுவிட்டிருக்கிறது. எனவே, தமிழர் - மலையாளி மனமாச்சரியம் டில்லி புன்ன கையுடன் பார்த்துக் கொண்டு, மோதுதல்' ஏற்பட்டால் போலீஸ்! போலீஸ்! என்று கொக்கரித்து அடக்குமுறையை அவிழ்த்துவிடவே செய்யும். மிக தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடியர்-என்போர் திராவிடர் என்ற இன உணர்வுகொண்டு, கூட்டாட்சிக்கான வேட்கை கொள்வர். அது, நமது ஏகாதிபத்தியத்திட்டத்கைத் தகர்த்துவிடும் என்ற கிலி டில்லிக்கு ஓரளவுக்குஏற்பட்டசமய மாக, இந்த 'மொழிவழி அரசு'ப் பிரச்சினை கிளம்பிற்று இதிலே, தமிழரும் மலையாளியும்,மனமாச்சரியம் கொள்வதும், தமிழரும் ஆந்திரரும் தகராறு மூட்டிக் கொள்வதும், தமிழர் கருநாடகத்தார் மனக்கசப்புக் கொள்வதும், டில்லிக்கு, மிக மகிழ்ச்சி யூட்டுகிறது. டில்லியின் எதேச்சாதிகாரம், மார் வாடி ஆதிக்கம்,நேருஏகாதிபத்தியம், வடநாட்டுச்சுரண்டல், எனும் ‘பேச்சு' ஓரளவுக்கு நிறுத்தப்பட்டு, தேவிகுளம் யாருக் குச் சொந்தம்,திருப்பதியை ஆந்திரர் கொள்வதா, பெல்லா ரியை இழப்பதா, காசர்கோடு களவாடப்படுவது அக்ரமம், என்று இத்தகைய பிரச்சினைகள் முன்னணிக்கு வந்துசேரும், என்பதற்கான அறிகுறி கண்டு, டில்லி களிப்படைகிறது! 'மொழிவழி அரசு' நேர்மையுடனும் உரிமை முறைப்படியும் அமைவதற்கான 'அமளி'யை மூட்டிவிட்டு விட்டால், இதற் காக இவர்கள் ஒருவருடன் ஒருவர் அடித்துக்கொண்டு கிடப் பர்--நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்பதே டில்லியின் திட்டம். பிரித்தாளும் சூழ்ச்சியைப் பிரிட்டிஷாரிடமிருந்து வடநாட்டுத் தலைவர்கள் நன்றாகக் கற்றுக்கொண்டிருக் கிறார்கள். தேவிகுளம் பீர்மேடு பிரச்சினைக்கானகிளர்ச்சியின்போது மக்கள் மன்றத்திலே, வடநாட்டுச் சர்க்காரின் இந்தப் பிரித் தாளும் சூதுபற்றி எடுத்துரைத்து, உண்மைப் பகைவன் யார் என்பதைச் சுட்டிக் காட்டும் வேலையை, பிறகட்சிகள்செய்யும் என்று எதிர்பார்ப்பதற்கிலலை! நேருவின் நெரிந்த புருவத் தைக் காணவும் அஞ்சுகிறார்கள் அந்த வீரர்கள் ! அந்தக் காரி யத்தைச் செய்யும் தனிஉரிமை'யை நாம் தான் நிறைவேற்றித் தீர வேண்டும் என்று எண்ணுகிறேன். இதற்கான ஆர்வம், இந்தப் பகுதியில் மிக வளமாக இருக்கிறது. நல்லார்வம் கொண்ட தோழன் ஒருவன்தான், எங்களை மலைமீது மோடார் வானில் கொண்டு சென்றான்-ஆர்வம்