பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245

245 அவனைச் சளசளவென்று பேசச் செய்தது கலகல வென்று சிரிக்க வைத்தது, பட படவென்று நடந்துகொள்ளச் செய் தது. வண்டியோ 'லொட லொட!! அதை அவன் பொருட் படுத்தியதாகவும் தெரியக்காணோம். நாங்கள் அதனைக்கவனிக் கவும் முடியாத நிலையில், காட்சியின் கவர்ச்சியிலே சிக்குண்டு கிடந்தோம். மலையினின்றும் கீழே வண்டிவருகிறது - உதைத் துக் கொள்கிறது, உறுமுகிறது - உருளைகளிலே ஏதோ சிக்கிக் கொண்டு விட்டது போன்ற சத்தம் கேட்கிறது-ஆர்வம் நிரம்பிய அந்தத் தோழனோ, எவ்வளவு பழுதுபட்ட வண்டி யும் தன் கைவண்ணத்தினால் செலுத்த முடியும் என்பதை எடுத்துக் காட்டும் ஒரே நோக்கம் கொண்டவனாகக் காணப் பட்டான். என் செய்வது? 'பழுதுபட்டிருக்கிறதோ?' என்று கேட்கிறார் தோழர் வியான், ஏதோ ஓர் மோட்டார் உறுப்பின் பெயரைக் குறிப் பிட்டு - அவன் அலட்சியமாகக் கூறுகிறான், பிரேக்கே கூடத்தான் சரியாக இல்லை! என்று. இதுதானா! வண்டி உருண்டோடி வருகிறது-கீழே அல்லவா இறங்கு கிறோம். இரண்டு வண்டிகள் ஒரு சேரச் செல்ல முடியாத பாதை; வளைவுகள். ஒரு புறம் மலைகள், மறுபுறம் பெரும் பெரும் பள்ளங்கள்; கீழே இன்னும் இறங்க வேண்டியது 1500 அடி இருக்கும். திடீரென்று மோட்டார் உருளுவது, தேய்ந் தும் ஊர்ந்தும்செல்வது போலாயிற்று. பாதையிலே வண்டி எக்காரணத்தாலோ ஒட்டிக்கொண்டுவிட்டது போன்ற ஒரு நிலை. ஒரு திருப்பம் வந்தது, 'பன்ச்சர்' ஆகிவிட்டது போலி ருக்கிறது என்று கூறி வண்டியை நிறுத்தச் சொல்லுகிறேன். வண்டி தானாகவே நின்றுவிட்டது; எந்தச்சக்கரத்திலே பன்ச் சர் ஆகிவிட்டது என்று பார்க்கக் கீழே இறங்கினேன்- உடனி ருந்த தோழர்கள் பொன்னம்பலனாரும் மதியழகனும் இறங்கி னர். நான்கு சக்கரங்களில் எது கெட்டுக் கிடக்கிறது என்று பார்க்கிறோம். வண்டியில் மூன்று சக்கரங்கள் மட்டுமே உள் ளன! பின் சக்கரங்களிலே ஒன்றுகாணோம்! திகைத்துப்போய் நின்றோம் நீங்கள் என்னை விட்டுவிட்டாலும் நான் உங்களிடம் வந்து சேராமல் இருப்பேனா என்று கூறுவது போல அந்தச்சக்க ரம் பின்புறம் உண்டு வந்து கொண்டிருந்தது. அச்சு' முறிந்துவிட்டது; 1500 அடி பள்ளம் கீழே. எதிரே திருப்பம்; பாதையோ வளைவு! வண்டியிலேயோ மூன்று சக்கரங்கள்? அவ்வழி வந்தவர்கள் அனைவரும் இக்காட்சி கண்டு திடுக் கிட்டுப் போயினர். அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்ட பிறகுதான், எவ்வளவு ஆபத்தான நிலை ஏற்பட்டது என்ப தும், எவ்வளவு எதிர்பாராதவிதத்தில் தப்பித்துக் கொண் டோம் என்பதும் எங்களுக்கே தெரிந்தது.