பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251

251 அத்தனையும், பூங்காமீது இருக்கும் அளவுக்கு,அன்புபொழிந் திடும் அந்தப் பூவையிடம் இருப்பதில்லையே! பூனைக்கு, நித்த நித்தம் ஒரு கிள்ளை'யைக் கொடுத்துக் கொண்டேனும், எஜமான் சொல்வதைச் சொல்லும் கிளிப் பிள்ளை நாகநாட்டிலே இல்லை! மனிதர்களின் தலையைச் சீவி, மண்டை ஓடுகளை மாலை களாக்கிப் போட்டுக்கொள்ளும் மகா பயங்கரமான காட்டு மிராண்டிகள் இந்த நாகர்கள் என்று இழிமொழி பேசுவோர் உளர் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் இன்று ஈடுபட்டிருப்பது தலைகளை நொறுக்கிடும் தன்னிகரற்ற தூய பணியில் - தலைகளை வெட்டும் வேலையில் அல்ல! நாகநாடு நாகருக்கே! என்கிறார்கள்; டில்லிக்கு வியப் பாக இருக்கிறது? மலையும் காடும், ஒரு நாடா? பொன்னும் பொருளும் குவிந்தா கிடக்கின்றன? தொழிலும் வாணிபமும் பெருகியா இருக்கின்றன? மாடமாளிகை கூடகோபுரம் உண்டா? மணி அணி அணிந்திடும் சீமாட்டிகளும் அவர்தம் மஞ்சத்தில் மிஞ்சுசுகம் காணும் பிரபுக்களுமா உள்ளனர்? ஒரு டாடா, ஒரு பிர்லா, ஒரு டால்மியா உண்டா? பசும் புல் சோலை இருக்கிறது; பல பொருள் தரும் ஆலை உண்டா? பெற்றெடுத்த செல்வத்தைத் தாய்மார் மூத்த மிடுவது இருக்கலாம், எழிலரசிகளின் மார்பகத்திலே புரளும் முத்து மாலைகள் உண்டா? இராஜ பவனங்கள் இல்லை! இரசாயனச் சாலைகள் இல்லை! இந்நிலையில் உள்ளபோது, நாகநாடு நாகருக்கு என்று முழக்கயிடுகிறார்களே! என்ன பேதைமை! என்ன பேதைமை! என்று டில்லி வியப்படை கிறது. நாகர்களோ, என்னென்ன இல்லை இல்லை என்று கூறி இழித்தும் பழித்தும்பேசுகிறார்களோ, அவைகளையும் அவைகள் அனைத்தையும் மிஞ்சக் கூடியனவற்றையும் பெற்றிடும் பேராற்றல் எமக்கு உண்டு. கட்டுண்டு கிடந்தால் இழி நிலை தான் நீடிக்கும். எமக்கென்று ஓர் கொற்றம் அமைந்திடின், ஏற்றம் பெறுவோம் - இதிலே சந்தேகம் கொள்வோர் எமது கட்டுடலைக் காண்பீர், கனல் கக்கும் கண்களைக் காணீர்; தோள் வலுவைக் காண்பீர், இயற்கை எமக்கென்று அளித் துள்ள ஓர் நில அமைப்பைக் காணீர், என்று கூறுகின்றனர். கடலில் முத்து, காட்டிலே சந்தனம், வயவில் எருதுகள், வாவியில்அன்னங்கள், ஆறுகளில்வாளைகள், அவைகளைமயக் கிடும் குவளைகள், தாமரை பூத்த குளம், தேன் சிந்தும்தோட் டம், வேழமும் வேங்கையும் ஒன்றோடொன்று போரிட்டுக் களம் அமைக்கும் காடுகள், அவைகள் மயங்கிடும் வண்ணம் பார் முழுதும் ஏர் முனையிலே என்று பண்பாடும் உழவர் தரும் செல்வம், தங்கம், இரும்பு, நிலக்கரி - காவிரி பெண்ணை, கோட்டை கொத்தளம், சிலம்புமேகலை, செழியன்வள்ளுவன்,