பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

252. எனும் எதை எதையோ காட்டி, திராவிடநாடு திராவிட ருக்கே, என்று நாம் முழக்க மிடுகிறோம்! புனலிடைமூழ்கிப் பொழிலிடை உலவிப் பொன்னார் இழை யும் துகிலும் பூண்டு- நமது மாதர் காட்சி தருவதைக் காட்டு கிறார் புரட்சிக் கவிஞர். புல்லர்கள் இக் காட்சி கண்டு மாசு கொண்ட மனத்தினராகிவிடுவரோ என்று அஞ்சுபவர் போல, எமது தாயகத்துத் தையலர் பொன்னாடை பூண்டவர், பொழி லினில் உலவிடுபவர், ஆனால் அப்பா! அவர்கள் கனிமொழி பேசி இல்லறம் நாடும் காதல் மாதர் என்று இயல்பை எடுத் துக் காட்டுகிறார்! இவ்வளவும் கேட்டுவிட்டு, இறுமாந்து கிடக்கும் வடவர், நாக நாட்டினரின் முழக்கத்தை மட்டுமா எளிதில் கவனிப்பர்! எங்கோ ஓர் மூலையில் கிளம்பும் காட்டுக் கூச்சல் என்றுதான் அலட்சியமாகக் கருதுவர், என்றுதான் தம்பி! நீ எண்ணிக்கொள்வாய். உண்மை அதுவல்ல! நம்மைவிட,நாகநாட்டினரால் டில்லி அதிபர்களின் கவ னத்தை ஈர்த்திட முடிந்திருக்கிறது மட்டுமல்ல - டில்லிக்குக் கலக்கமேஏற்பட்டிருக்கிறது. நாடுகளிலே நல்லறிவுப் பிரசார முறைகளின் மூலம் நடைபெறும் விடுதலைக் கிளர்ச்சியை, அப் பாவிகளைத் தட்டிக்கொடுத்தும், அற்பர்களுக்கு ‘பவிஷு3 கொடுத்தும், அடுத்துக் கெடுப்போரைத் தூக்கி விட்டும், கெடுத்திட, குலைத்திட முடிகிறது,ஓரளவுக்கேனும்! காணுங் காட்சி அனைத்தும் நெஞ்சு உரத்தை வழங்கும் தன்மையில் அமைந்துள்ள அந்த மலை மண்டிலத்து மக்களிடம், இந்த முறைகள் பலன் தரவில்லை! டில்லி, புன்னகை காட்டுகிறது, பொன்னை வீசுகிறது- நாகநாடு ஏறெடுத்துப் பார்க்க மறுக்கிறது. நண்பர்களே! நாகர்களே! எங்கே இருக்கிறீர்கள்? உங் களைக் காணவே வந்துள்ளோம் -என்று உபசார் மொழி பேசு கிறது டில்லி. குன்றுகளிலே, இங்கும் அங்கும் தெரிகிறார்கள். சிறிது நேரத்தில் எல்லாக் குன்றுகளிலும் தெரிகிறார்கள், பாதைகள், மலைகளுக்கிடையில்! மலைகளுக்குத் துணையோ காடுகள்! இடையிடையே உள்ள சிற்றூர்களிலேயோ, நாகர்கள். அவர்களின் உள்ளமோ, வீரம் நிரம்பிய பெட்ட கம். டில்லி திகைக்கிறது. நாகர்களின் தலைவன் பிகோமீது டில்லி, வகைவகையான கணைகளை வீசிப் பார்த்தது. பாராளு மன்றத்தின் பளபளப்பு, இராஜபவனச் சிறப்பு, பதவிப் பசை - எதனாலும் இந்த மாவீரனை மயக்க முடியவில்லை. வெளிநாட்டாரின் கையாள் என்று பழி சுமத்தினர்- வெற்றுரை என்று கூறி, எள்ளி நகையாடினர் நாகர்கள். கிருஸ்தவப் பாதிரிமார்கள் சிலர் தூண்டிவிடும் கிளர்ச்சி இது என்றனர்- இப்பொய்யுரையைக் கூறிட உங்கட்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டனர், நாகர்,