பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253

253 நாகநாடு, வளமும் வசதியும் குறைந்த நிலையில் இருக் கிறது - நல்ல பாதைகள் - நவீன சாதனங்கள் -சமூக சேவை அமைப்புகள்-இவைகளுக்கெல்லாம் நாங்கள் பணம் தருகிறோம் வேண்டியமட்டும்-பெற்றுக்கொண்டு, நாட்டை அழகுபடுத்தி மகிழுங்கள் என்று டில்லி கூறிப் பார்த்தது. வழுக்கி விழுந்த வனிதை அல்லவா, மாலைக்கும் சேலைக்கும் மயங்குவாள்?நாகர்கள், டில்லியின் உதவித் தொகையைத் தீண்ட மறுத்தனர். ஊராட்சி மன்றங்கள் அமைக்கிறோம் - அவைகளிலே அமர்ந்து உங்களுக்குத் தேவையான காரியங்களைச் செய்து கொண்டு, உரிமையைச் சுவையுங்கள் என்றனர்! கெண் டையை வீசி வராலைப் பிடித்திடும் தந்திரம் என்று கண்டு கொண்டனர்; தேர்தல்களை வேண்டாமென்றனர். டில்லியின் ஒப்பற்ற தலைவர்கள், 'இராணுவம்' புடை சூழப் பவனி வந்தால், காட்சி கண்டு கவர்ச்சி அடைவர் என்று எண்ணி, அந்த முறையையும் கையாண்டு பார்த்தனர் பலன் இல்லை. பிசோ, நாகர்களை மலைச்சாரல்களில், அடர்ந்த காடு களில். சிற்றூர்களில், திரட்டினான் - தாயக விடுதலை ஆர்வத்தை ஊட்டிய வண்ணமிருந்தான். இப்புறமிருந்துடில்லி யின் படைகள் தாக்கியதால், மலைப் பாதைகள் வழியாகக் காடு பல கடந்து, பர்மா சென்றனர் நாக நாட்டு விடுதலை வீரர்கள்; இந்தியாவின் நேசத்துக்குப் பாத்திரமாக இருக்கும் பர்மாவைத் தட்டிக் கொடுத்து, அங்குத் தஞ்சம் புகுந்த நாகர்களைத் துரத்திப்பிடித்தது டில்லி. இந்த முறை களால் பலன் கிடைக்காது போகவே, பிரிட்டிஷாரின் பிரித் தாளும் திட்டத்தைக் கையாண்டு, நாகர் தேசீயக் கழகம் எனப்படும் பாசறையில் பிளவு ஏற்படுத்தி, அதன் பயனாக விடுதலைக் கிளர்ச்சியை நசுக்கலாம் என்று முனைந்தது டில்லி- பத்து தலைவர்கள் கிடைத்தனர் என்று மகிழ்கிறது! அவர் களையோ நாகர்கள், 'துரோகிகள், 'தூர்த்தர்கள்' என்று கூறு கின்றனர். இந்தப் பத்துத் தலைவர்களும், நாகநாடு கோரிக்கையை மறுக்கவில்லை! பிசோவின் பலாத்கார முறையைக் கண்டிக் கிறார்கள்! ஆனால் பிசோ பலாத்காரம் என் கொள்கை அல்ல என்று முன்பே திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். அசாம் மாகாண முதலமைச்சர் விஷ்ணுராமமேதி என்ப வரைக் கண்டு பேசிப் பலாத்காரத்தைக் கண்டித்து பிசோ அறிக்கையே தந்திருக்கிறார்! எனினும் நாகர் விடுதலைக் கிளர்ச்சி என்பது பயங்கரமானதோர் பலாத்தார இயக்கம் எனவே அதனை ஒடுக்கியே தீருவோம் என்று டில்லி கொக் கரித்த வண்ணம் இருக்கிறது.