பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

254 இந்நிலையிலேதான், தம்பி! பண்டித பந்த் கிளம்பினார் நாக நாட்டுக்கு வருகிறார். அமைச்சர், வரவேற்பு வளைவுகள் அமையுங்கள் என்று அசாம் சர்க்கார் மும்முரமான பிரசாரத் தில் ஈடுபட்டனர். நாகர்களில் மயக்கத்தில் சிக்கக்கூடியவர் களைப் பிடித்திழுத்து வைத்து, பழகிய யானையைக் கொண்டு காட்டிலே யானைகளைப் பிடிக்கிறார்களாமே, அந்த முறைப்படி வேலைசெய்து பார்த்தனர். நாகர் விடுதலைக் கழகமோ, அமைச் சருக்காக ஏற்பாடாகும் வரவேற்பு வைபவங்களில் யாரும் கலந்து கொள்ளாதீர்கள் என்று அறிக்கை வெளியிட்டது. நெஞ்சு உரத்தையும் நேர்மைத் திறத்தையும் கவனித்தாயா தம்பி! வருகிறவர், பெரிய தலைவராக இருக்கலாம்--புகழ் தாங்கியாக இருக்கலாம் - பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எனும் சிங்கத்தை அதன் குகைக்குள்ளே பிடரியைப் பிடித்தாட்டீய பெரு வீரனாக இருக்கலாம் - ஆனால், நாகர்களைப் பொறுத்த வரையில், அவர் வெறுக்கப்படவேண்டிய பகைவன் என்ப திலே ஐயமில்லை. ஆகவே, வரவேற்பு விழாவில் கலந்து கொள்ளாதீர்கள் என்று நாகர் தலைவன் கூறுகிறார்-டில்லி அறிக்கையே, நாகர் தலைவனின் அறிக்கை வெற்றி பெற்றது ஓரளவுக்கு என்று குறிப்பிடுகிறது. தம்பி! இதற்குப் பொருள் என்ன தெரிகிறதா? பண்டித பந்த் பவனி வந்தார்-தோர ணங்களைக் கண்டார்—கொடி அலங்காரம் தெரிந்தது- அதி காரிகள் அசடு வழிய நின்றனர்-ஆனால், நாகர்கள் சீந்த வில்லை. இஃதல்லவா நாட்டு விடுதலை உணர்ச்சி வீறுடன் இருப்பதற்கான அறிகுறி! இங்கே? எண்ணும்போது வெட்க மும் பிறக்கிறது, வேதனையும் கொட்டுகிறது. டில்லி பாராளு மன்ற உறுப்பினர், திருச்சிப் பிரமுகர், கொடை பல தந்த குணவான். பெரியாரின் பேராதரவு பெற்ற சீமான், நேரு பண்டிதர் வந்தபோது, அவருக்கு மாலை சூட்டி, மகிழ்வூட்டி, பெருமிதம் அடையத் துடியாய்த் துடித்தாரம்-மனுச் செய்துகொண்டு, மாலை தயாரித்து மாளிகையை அலங்கரித்து விட்டு, மாவீரன் நேரு வருகிறார், அவருக்கு மரியாதை செய் வோம் என்று ஆவலுடன் இருந்தாராம்-மனு நிராகரிக்கப் பட்டது- எமது மாபெருந் தலைவருக்குத் தாங்கள் அணிவிக்க விரும்பும் மாலையை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என் பதை அறிவித்துக்கொள்கிறோம் என்று சர்க்கார் அதிகாரிகள் கூறி விட்டனராம்! தம்பி! மதுரம் M.P. தரும் மாலையை ஏற்றுக்கொள்ள நேரு பண்டிதருக்கு நேரம் கிடைக்கவில்லை -பாட்டுக்கார அம்மாளைக் காணவும், ஆட்டம் ஆடும் அம்மாவிடம் பேசவும் இத்தனை பெரிய தலைவருக்கு நேரம் கிடைத்தது! என்று பெரியார் பேசினது தெரிந்தபோது, எனக்குக்கூட உருக்க மாகத்தான் தெரிந்தது! ஆனால், வேறொன்றைப் பார்க்கும் போது, வேதனைதான் பிறக்கிறது? நாகநாட்டுத் தலைவரிடம் எழுந்துள்ள நாட்டுப்பற்றுணர்ச்சி, விடுதலை வேட்கை, வீரா