பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

52 இதற்கோர் கண்டனக் கூட்டம் போட்டு, இருபதாம் தேதி மாறடித்தழுவோம் என்று 'இந்து' தீர்மானித்துவிடக் கூடும்! நாடு அவ்வளவு முன்னேறிவிட்டிருக்கிறது. "நம்ம காமராஜா என்று சொல்லிச் சொல்லி நாக்குக்கூடத் தழும் பேறிவிட்டிருக்கும்; எனினும், 'அவர்களின்' போக்கிலே மாறுதல் காணோம். அது கிடக்கட்டும் - அந்தப் பிரக்ச்னை தீர, விருதுநகர் வித்தகரிடமா மருந்து கிடைக்கப்போகிறது? ஆதிக்கக்காரர்களின் போக்கிலே ஏற்பட்டு வரும் மாறுத லைக் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கவேண்டும் என் பதைக் கூறத்தான் விரும்புகிறேன். தம்பி! இடையே இந்த சர்க்கார் கவனம் வந்தது, விட்டுத் தள்ளு. சென்னையில் ஒரு பகுதிக்கு Black Town கருப்பர் ஊர் என்று துணிந்து பெயரிட்டனர், வெள்ளையர்! அது, கொடுக்கிறாயா, கொல்லட்டுமா? என்று கேட்கும் நிலை. பிறகு, கருப்பர் பட்டினம் ஜார்ஜ் டவுன் என்று ஆயிற்று வேலாசாமி இரவல் கேட்கிறான் என்று புளுகி, நகையைப் பறித்த கட்டம் போன்றது. கருப்பர் - இன்று, அன்பர், நண்பர், தோழர், என்றெல் லாம் ஆகிவிட்டது! ஏகாதிபத்யம் போக்கை மாற்றிக் கொண்டது-நீதி, நேர்மை. நியாயம் இவைகளுக்காகவா? செச்சே! அதற்கல்ல; நோக்கம் நிறைவேறப் பழைய முறை உதவாது என்று புரிந்து விட்டதால். திராவிடத்தைத் தமது ஆதிக்கத்துக்கு உட்படுத்திக் கொண்டுள்ள வடநாட்டுத் தலைவர்கள் சிலர், வரலாறு காட்டும் இந்த நிலைமைகளை நன்கு அறிந்து கொண்டிருக்கிறார் கள்; எனவே அவர்கள், அச்ச மூட்டுவதால் பலனில்லை, ஆசை காட்டவேண்டும் என்று புரிந்து கொண்டு, செய் லாற்றத் தொடங்கியுள்ளனர். காட்டு மிருகங்களை வேட்டையாடுவது போல நாட்டு மக்களைச் சுட்டுத்தள்ளிய வெள்ளைக்காரனே, காலம் தெரிந்து, கருத்தை மறைத்திடவும், கனி மொழி பேசிடவும் கற்றுக் கொண்டான் என்றபோது, ""அதிர்ஷ்டப் பரிசுச் சீட்டு வாங்கியவனுக்கு ஆறு இலட்சம் கிடைத்ததுபோல, களத்தில் கடும் போரிட்டு அல்ல, வீர தீரத்தைக் காட்டியல்ல, நமது கோட்டைசனைத் தாக்கித் தகர்த்து கொடி மரங்களை வெட்டி வீழ்த்தி, நம்மைப் புறமுதுகிட்டு ஓடச்செய்து அல்ல, வெளி யேறிய வெள்ளையனுடைய கண் பார்வையில் இருந்த ஒரே காரணத்தால், திராவிடத்தை ஆளும் நிலையை வடநாட்டுத்