பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

55 மன்னர் இருந்தனர். இங்கும், அங்கும் மணிமுடி இருந்தது, இரு மன்னர் முடியிலும். எனினும் இரு வேறு முறையன்றோ காண்கிறோம் அவர் தம் போக்கில். மக்களுக்காக அரசு. அரசு செம்மையாக நடந்துவர மன்னன் என்பது திராவிடத்தில், தத்துவமாக மட்டுமல்ல, திட்டமாக இருந்து வந்தது அந்த நாட்களிலும். மன்னன் செம்மையாக வாழ ஒரு அரசு, அந்த அரசு வளமுடன் இருக்க மக்களின் உழைப்பு என்ற தன்மை இருந்து வந்தது வடக்கில். வெட்டிப் பேச்சல்ல, தம்பி. மன்னன் தன்னிடம் அர சாளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகக் கருதிப் பணியாற்றினான் இங்கு. அங்கு அங்ஙனமல்ல!நாடு, மன்னன் உடைமை! அதன் பயனைப் பெறும் அனுமதியை மன்னன் மக்களுக்கு அளிக்கிறான் அங்கு. எனவேதான் காண்கி றோம், நாடு மன்னனால் எப்படி வேண்டுமானாலும் ஆக்கப் பட்டு விடும் அக்கிரமத்தை! கேகயன் மகள் ஒரு கோகிலம்? தசரதமன்னன் நரைத்த தலையினன் !! அங்கம் தங்கம், அந்த அரசிளங்குமரிக்கு; உட லெங்கும் காலம் தந்த சுருக்கம் இந்த அரசனுக்கு. எனினும் அந்த சிற்றிடைச் சிங்காரியைச் சரசக் கருவியாகக் கொள்ள வேண்டுமென்று இந்த சத்திழந்தவர் விரும்பினார்- என்ன செய்தார்? என்னைக் களிப்பிக்கும் தொண்டு புரிய இந்தத் தோகை இசையட்டும். நான், அவள் வயிற்றில் உதிக்கும் மகனுக்கே என் இராஜ்ஜியத்தைத் தருகிறேன் - இப்போதே, இதோ என் இராஜ்பத்தைத் தந்து விடுகிறேன் என்று வாக் களிக்கிறான். வயோதிகருக்கு அந்தக் கணை புகுந்தால், கருத்துஎப்படி ஆகிவிடுகிறது என்பதைக் கவனிக்கச் சொல்லவில்லை- இதை அறிய இராமாயண காலத்துக்கா போக வேண்டும், நமது நாட்களிலேயே பார்க்கிறோமே!! கொடுத்த வாக்குறுதியைத் தசரதன் காப்பாற்றாதது குற்றமல்லவா என்று "இராமதாசர்களைக் கேட்கும்படி கூடச் சொல்லவில்லை - இதைவிடக் காரசாரமான கேள்விக் கணைகளால் தாக்குண்டு, அவர்கள் வைகுண்ட வாசனிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் உன்னை கவனிக்கச் சொல்வது எது தெரியுமா தம்பி, தசரதன் தன் ஆட்சியில் இருந்து வந்த இராஜ்யத்தை, தன் இஷ்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் தர முடிகிறது. இது வடநாட்டில்தான்; இங்கு இதுபோல் நடைபெற்ற தில்லை.