பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

60 சாகஸத்துக்குப் பலியாக மறுத்திடும் அணிவகுப்புஒன்று இருக்கிறது. அது வளர்ந்த வண்ணமும் இருக்கிறது, என்ப தைக் காட்டியாக வேண்டும். எனவே இனி திராவிடம் வந்து "தந்தினம்" பாடி மேலும் தளைகளைப் பூட்டிட எண்ணும் வடநாட்டுத் தலைவர் களுக்கு, கழகம் கருப்புக்கொடிமூலம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தைத் தோழர்கள் பலர் கூறியுள்ளனர் -நான் முறைப்படி அதனை நமது பொதுச் செயலாளருக்குத் தெரிவித்திருக்கிறேன். தடியடி! துப்பாக்கி! சிறை! கலகம்! குழப்பம்! கல் லெறி! எனும் பலப்பல கிளம்பக் கூடும்- எனினும் இவை களைக் கண்டு கண்டு நாம் பழக்கப்பட்டவர்கள் தம்பி! உன் கருத்து என்ன? கண்ணே! மணியே! கற்கண்டே! என்று அன்புடன் பேசுகிறோம்; அக்ரமக்காரர்களே, எங்களுக்குக் கருப்புக் கொடியா காட்டுகிறீர்கள், என்று வடநாட்டுத் தலைவர்கள் நெருப்பைக் கக்கக் கூடும். காட்டு மிராண்டிகள்! பைத்தியக்காரர்கள்! சிறுபிள்ளை கள்! என்று மீண்டும் ஒரு முறை நேரு பண்டிதர் நாக்கைத் தீக் கோபமாகக்கக் கூடும். ஆனால், நமக்கு. வடநாட்டுத் தலைவர்கள் நம்மைப்பற்றி எப்படிப் பேசுகிறார்கள், புகழ்ந்தா? இகழ்ந்தா? வெல்லமா? வெடிமருந்தா? என்பதல்ல, கவனிக்க வேண்டிய பிரச்னை. தம்பி! மலத்தை மிதித்து விட்டாலும், கழுவி விட்டால் நாற்றம் போய் விடுகிறது; பூசிய சந்தனம் வியர்வையில் கரைந்து காற்றோடு போய்விட்டாலும், மணம் மடிந்து படுகிறது! நம்மை வடநாட்டுத் தலைவர்கள் புகழ்கிறார்களா, இகழ் கிறார்களா - சந்தனம் பூசுகிறார்களா, நரகல் நடையில் ஏசு கிறார்களா, என்பதல்ல பிரச்னை. நமக்குள்ள பிரச்னை - நம்மைப் போன்ற சாமான்யர் களுக்குத்தான் தம்பி, அமைச்சர்களுக்கு அல்லவே அல்ல- வடநாட்டார் நமது தாயகத்தை எப்படி நடத்துகிறார்கள் என்பது தான் அடிமைத்தளை பூட்டியா, அல்லது நேசநாடாக் கிக் கொண்டா என்பதுதான் பிரச்னை. வழுக்கி விழுந்த வனிதாமணிகள் வந்தார்க்கு விருந்தளிக்கட்டும்; தாயகத்தின் தளை ஒடித்திட நாம் பணியாற்றுவோம் -- நமது பங்கினைச் செலுத்துவோம். 19--6-1955. - அன்புள்ள,