பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

62 கிறார்கள். சரஸ்வதி பூஜை!! இந்த இலக்கிய ஆய்வாளரும், சரஸ்வதி பூஜையை முடித்துவிட்டுத்தான் உட்காருகிறார். ரிக்ஷாக்காரர் நடத்தும் பூஜையில் உண்மையான பக்தி இருப் பதை இவர் உணருகிறார். (இவர் உணர்ந்து என்ன பலன்! கடவுளல்லவா உணர வேண்டும்! உணர்ந்தால் இந்த ஜென் மங்களை ஏன் மனித மாடுகளாக்கி வேதனைப்படுகுழியில் தள்ள வேண்டும்? என்று- கேட்பாய், தம்பி.) உணர்ந்து உவகையுடன் தன் இல்லாளைக் கூப்பிட்டு, 'இதோ பார்! இவர்கள் நடத்தும் பூஜையை. இதிலல்லவா உண்மை பக்தி இருக்கிறது" என்று கூறுகிறார். அந்த அணங்கு, செங்கல்லை வைத்துக் கும்பிடுவ தைக் கேலி செய்கிறாள். உடனே இவர், இலக்கிய ஆய்வாளர் அல்லவா, ஒரு தத்துவத்தை எடுத்து வீசுகிறார்; “கடவுள் கல்விலா இருப்பார், நெஞ்சிலல்லவா இருக்கிறார்" என்கிறார். கூறிவிட்டு மறுப்பாயோ இதனை" என்று கேட்கிறார்; மாது சிரோமணி "எனக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம். இட்டிலிக்கு அரைக்கணும்” என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறார்கள். சுயமரியாதைக்காரர் தவிர வேறு யாரால் இப்படிப்பட்ட கருத்துக் குலுங்கும் கதை தீட்ட முடியும் என்று எண் ணிக் கொள்வாய். நீ மட்டும் என்ன தம்பி, நானும் அப்படித் தான் எண்ணினேன்; எழுதினவரும். நாமெல்லாம் அவ் விதம் எண்ணிக்கொள்ள இடம் வைத்துத்தான் எழுதினார். ஆனால், கதையின் நோக்கம் முற்றிலும் வேறு!! எழுதியவர், சுயமாரியாதைக்காரராக இருக்கத் துணிய வில்லை; "மேதை" யாகிவிட விரும்புகிறார். எனவே கடவுள் எங்கு உறைபவர்? கருத்திலா, கல்லிலா, என்ற விவாதத் தைத் துவக்கி, முடிவு கூறாமல், அம்மையை மாவு அரைக்க அனுப்பி விட்டு, ஐயாவைக் கொண்டு, கார்ல் மார்க்ஸைத் தோற்கடிக்கச் செய்கிறார்!! ஜன்னலுக்கு வெளியே இருந்து பார்த்தாரல்லவா, பக்தி யுடன் பூஜை செய்யும் ரிக்ஷாக்காரர்களை. அவர்கள் அன்று இரவு குடித்துவிட்டு, அடிதடியில் இறங்கி, ஆபாசமாகநடந்து கொண்டார்களாம். இதைக் கண்டு இவர் மிக வருந்துகிறார். இவ்வளவுதானா இவர்களின் பூஜையும் பக்தியும்என்றுஎண்ணி உள்ளம் நைந்து போகிறது. இந்தக் கட்டத்தோடு கதையை முடித்துப் பூஜைகள் செய்து விடுவதாலேயே, போக்கு மாறி விடுவதில்லை, பூசல் ஒழிந்து போவதில்லை, புத்தி தெளிவாவ தில்லை என்று அறிவுரை தருகிறாரா என்றா கேட்கிறாய், தம்பி? அது நமது 'முறை'-மேதைகள் அப்படிச் செய்வார்களா? இலக்கிய ஆய்வாளர். இல்லக்கிழத்தியுடன், கல்லிலாகடவுள் இருப்பார், இருந்திருந்தால் கஜனி மகமது கண்டதுண்ட மாக்கப்பட்டிருக்க மாட்டானா? என்று வாதாடினாரல்லவா!