பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

63 அதே முறையில், கல்லைக் கடவுளாகக் கருதிக் கும்பிடுவதும், பூஜை செய்வதும், கன்னத்தில் அடித்துக் கொள்வதும், காப் பாற்று சாமி என்று வேண்டிக் கொள்வதும், நல்லறிவையும் நன்னெறியையும் தரக்கூடுமானால், காலையிலே (இவர் பார்த்து மெச்சத்தக்க வகையில்) பூஜை செய்த ரிக்ஷாக்காரர் கள், மாலை குடித்துவிட்டு வந்து கும்மாளமடிக்கும் நிலை வந் திருக்கலாமா, என்றெல்லாம் ஆராயவில்லை ஆராய்வாரா! மேதை'யாக இருக்க வேண்டுமானால், அத்தகைய ஆபத்தான ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடாதே! சுயமரியாதைக் காரனாக்கி விடுமே! இவருடன் வாதாட முடியாமலோ, விருப்பமில்லாமலோ, மனைவி, இட்லிக்கு மாவு அரைக்கச் சென்றுவிட்டார்கள்; இவர், இந்தக் காட்சி கிளறிவிடக் கூடிய கருத்துக்களைச் சந் திக்க அஞ்சி, தூங்கச் செல்கிறார். காலையில் மார்க்கட்டுக்குச் செல்கிறார் குடிபோதையிலே, எந்தச் சாமி, பந்தலை ரிக்ஷாக் காரர் பிய்த்துப் போட்டனரோ, அதை அவர்கள் செப் பனிட்டுக் கொண்டிருக்கக் காண்கிறார்! இவர், உங்கள் மனதிலே நேற்றைய பூஜை உயரிய எண் ணங்களைத் தரவில்லையா! மனிதன் தேவனாகக் கூடும் பூஜா மகிமையால் என்று கூறப்படுகிறது. நீங்களோ கேவலம் மிருகமாகி விட்டீர்களே நேற்றிரவு - என்று விரிவுரையாற்றி னாரா? இல்லை! சிறிதளவு பயம் இருந்திருக்கலாம், "சரிதான், போசாமி! சும்மா என்னமோ எங்களைத் திட்டறே! வா,சாமி, என்கூட ! எத்தினி பெரிய பார்ப்பானுங்களெல்லாம் குடிச்சிப் போட்டு மில்ட்டேரி ஓட்டல்லே பிரியாணி குர்மாவைத் தின்னு ஏப்பம் விடறானுங்கோன்னு காட்டறேன்" என்று ரிக்ஷாக்காரன்,' வம்பு தும்பு' பேசிவிடக் கூடும். எனவே, இவர் இதமாக அவர்களிடம் பேசி, குடிக்கக்கூடாது என்று உபதேசிக்க, அவர்களும் சாமி சாட்சியாகக் குடிப்பதில்லை என்று சத்தியம் செய்கிறார்கள். இதுதான் கதை! இதிலிருந்து இவர் பெற்று, படிப்போ ருக்குத் தரும் பாடம் என்ன தெரியுமோ? கபந்த தத்துவத் தைப் போதித்த கார்ல் மார்க்சின் போதை சித்தாந்தம் கொஞ்சமும் உண்மையில்லை - என்பது பாடம்- பாடமாம்!! இவர் தீட்டிய கதைக்கும் மார்க்சின் தத்துவத்துக்கும், என்ன தொடர்பு? எந்தச் சம்பவம் மார்க்சின் தத்துவத்தைப் பொய்ப்பிக்கிறது?- இவை பற்றி விளக்கினாரா - இல்லை! ஏன் விளக்க வேண்டும்! மேதைகளுக்கு அதுவா வேலை!! மார்க்ஸ், மதம் மக்களுக்கு அபின் என்றார்.