பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

ரைப் 65 பொறுத்த வரையில்! அம்மையின் திருப்பாதங் கள். கஜமுகன் அருள் பாலிக்கப்பட்டவையாக இருக்க லாம், வெளியே அழைத்து வந்தால், ஆபாசமாக இருக்கு மென்று ஐயங்கார் சுவாமிகள் கருதியிருக்கலாம். "இந்த "ஜட த்தோடு யார் போவா, பீச்சுக்கு? இது மூஞ்சியும் முகரக் கட்டையும் பார்த்தாலே, ‘பீச்’சுக்கு வர்ரவா, கேலியான்னா பேசுவா? இதனோட தொண தொணப்பை ஆத்திலே சகிக்கிறது போதாதுன்னு, பீச்சுக்குப் போய்வேறே பிராணனை விடணுமா?-வேண்டாம் டிம்மா நான் போகல்லே, அவரோட” என்று சகதர்மணி கூறிவிட்டிருக்கலாம். அநாகரிகமான வேறு பல காரணங்களும் இருக்கலாம். அவர், தமது துணைவியை உடன் அழைத்து வராததா லேயே, அதுதான் முறை, தமது இல்லக்கிழத்தியுடன் வரு பவர்கள், நாகரீக மற்றவர்கள் என்று பேசுவது அறி வுடைமை யாகுமா? அதுபோலத் தான், இவர்களால் கலையைப் பிரசாரத் துக்குப் பயன்படுத்த முடியவில்லை. அந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கிட்டவில்லை. இதைக் கொண்டு, கலையை நல்லறிவுப் பிரசாரத்துக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தும் மற்றவர்களைப் பார்த்து, பொம்மனாட்டிகளை ஏன் அழைச்சிண்டு வரணும் என்று கேட் கும் போக்கில், கலையில் பிரசாரம் இருக்கலாமா, என்று இந்த மேதைகள்' பேசுகிறார்கள். தம்பி! நான் இப்படிச் சொல்வதால், சுவையும் அழகும் கொண்ட வகையில் எழுதக்கூடியவர்கள் நம்மவர்கள் மட்டும் தான், மறுமலர்ச்சி எழுத்தாளர்களுக்கு அவ்விதம் எழுதவே தெரியாது, என்று அகம்பாவம் கொள்கிறேன் என்று எண்ணிக் கொள்ளப்போகிறார்கள்-சொல்லிவிடு அவர்களுக்கு நான் அப்பப்பட்டவனல்ல என்பதை! அவர்கள் தோல்வி அடைவதற்குக் காரணம் அழகாக, அருமையாக எழுதத் தெரியாததால், அந்தத் திறமை இல் லாததால் அல்ல! அவர்களின் தோல்விக்குக் காரணம், அவர்கள் மனதிலே, தெளிவான திட்டமான கொள்கையும், அதைக் கடைப்பிடித்தாக வேண்டும் என்ற நேர்மையும் இருப்பதில்லை. பழைமை செத்து விடுகிறதே என்ற துக்கம்குடைகிறது. அதேபோது இந்த நாட்களில் பழைமையை ஆதரிப்பதா என்று வெட்கமும் வேலாகிக் குத்துகிறது. எந்த முகாமில் இருப்பது, என்பது பற்றி முடிவெடுக்க இயலாமல், அவர்கள் குழம்பிக் கிடக்கிறார்கள்! அந்தக் குழப்பம், அவர்களின் திறமையை மண்ணாக்கி விடுகிறது.