பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66 இந்தக் கதையையே பாரேன்? கல்லுக்கு மந்திர சக்தி ஊட்டுகிறார்கள் தெய்வம் ஆகிறது - என்ற பழைமையைப் பாரியாள்' கூறிடக் கேட்டோம். இது நமக்குப் புரிகிறது! ஓஹோ! இது பத்தாம் பசலி ! எவ்வளவு சொன்னாலும் ஏறாது ! ! என்பது தெரிகிறது. ஆனால் இலக்கிய ஆய்வாளனா கவும, அந்த மாதுசிரோமணியின் மணவாளனாகவும் இருப்ப வரின் போக்கு எப்படி இருக்கிறது? பழைமையின் பக்கம் நிற்கிறாரா! புதுமைக்காகப் போர்முரசு கொட்டுகிறாரா? என்று பாருங்கள்; குழம்புகிறார், வேறென்ன! புதுமைக் கருத்திலே திளைத்தவர் போல மனைவியிடம், "கஜனி மகமதும் கோயில்களை அவருடைய ஆட்களும் இடித்துத்தள்ளி விக்ரஹங்களை எல்லாம் மசூதியிலேவாசற் படிகளாகப் போட்ட காலத்தில் இந்த யந்திர மந்திரங்கள் ஒன்றும் பலிக்கவில்லை. தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள், நரசிம்மாவதாரத்தில் வந்தது போல அந்த வாசற் படிகளிலிருந்து வந்து கஜனியின் ஆட்களை ஹிரண்மனைக் கிழித்தது போலச் கிழித்து விடவில்லை," என்று கூறி, ஏன் என்று கேட்கிறார்? எவ்வளவு தீவிரத் தன்மை சுடர்விடு கிறது! எத்துணைப் பகுத்தறிவுக் கதிர் தெரிகிறது! ஆனால் எற்றுக்கு! ! நேக்கு இந்த வம்பு தும்பு தெரியாது என்று கூறிவிட்டு அந்த அம்மை இட்லிக்கு மாவு அரைக்கச் சென்று விடுகிறார். நான் அந்த அம்மையை மதிக்கிறேன். நமக்குத் தெரியாது தேவையற்றது இந்தப் பிரச்னை என்ற தன்னடக்கம் இருக் கிறது, இவர்களிடம். சரியோ, தவறோ, பழமைதான் பிடித்த மாக இருக்கிறது1 அதற்கு ஆதாரம் தேட வேண்டும் என்ற அவசியமும் தோன்றவில்லை!! அவர்களின் நிலை, புரிகிறது, நன்றாக. ஆனால் இவர்! அசகாயசூரர் போல ஒரு பிரச்னை யைக் கிளப்புகிறார். தூணிலிருந்து வெளிப்பட்ட துளசிமாலை யோன், ஏன் கஜனி மகமதைக் கிழித்தெறியக் கல்லிலிருந்து வெளிவரவில்லை என்று கிளப்பி விட்டு, பதில் அளிக்கிறாரா, எந்தப் பக்கமாகவாவது? அதுதான் இல்லை! அம்மை சுட்டுத் தரப்போகும் இட்லிக்குக் காத்துக் கொண்டிருக்கிற வராகத் தெரிகிறதே தவிர, கடவுள் எங்கு இருப்பார், கல்லிலா, நெஞ்சத்திலா என்ற சிக்கலான பிரச்னையைக் கிளப்பி விட்டோமே, ஒரு கதையில்; இதற்கு ஏதாவதோர் சார்பில் பதில் தரவேண்டாமா என்ற பொறுப்புக் கொண்ட வராகத் தெரியவில்லை. "தெற்கே போகிற வண்டிங்களா! நீங்க எங்கே மதுரைக்குப் போகிறிங்களா?" என்று பன்னிப் பன்னிக் கேட்டு விட்டு, "அந்த ரயில் வந்ததும் வராததும் எனக்குத்