பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

68 வதாகப் பக்கிரிசொன்னான், அவன் சொன்னபடி பூஜை பல செய்யவே செலவிட்டேன்! களவு என்கிறீர்கள், கடவுளைத் தேடிக் காணச் சென்ற என் புண்ணிய காரியத்தை! என்று வாதாடுகிறான். புதுமையின் வேகத்தையும் தடுக்க முடிவதில்லை - பழை மையாளர்களையும், நாசுக்காகவாவது திருத்தமடையச்செய்ய முடிவதில்லை. காரணம், இவர்கள் திறமையற்றவர்கள் என்ப தல்ல; உள்ள சரக்கு மகாமட்டம். ஊசல் சரக்கை உண்மை அறிந்த மக்கள் குப்பைக்குப் போடுகிறார்கள்; இவர்கள் அதைக் குனிந்தெடுத்து, கூவிக் கூவி விற்கிறார்கள்! வியாபா ரம் மிக மந்தமாக இருக்கிறது! தம்பி, ஆச்சாரியார் போன்ற அதிமேதாவிகளுக்கே ஏற்படும் குழப்பத்தைப் பாரேன், நிலைமை விளங்கும். சேக்கிழார் திருநாளில் பேசுவதற்காக, ஆச்சாரியாரை அழைத்தனர். சென்ற கிழமை. சைவர்களுக்கு அவ்வளவு ஆள்பஞ்சமா என்று கேட்காதே தம்பி! அவர்களுக்கு அவ் வளவு சமரச ஞானம் என்று எண்ணிக்கொள்! இப்போதெல் லாம், அரியும் அரனும் ஒண்ணு! சென்ற இடத்தில் ஆச்சாரி யாருக்கு உள்ள குழப்பம், அவர் பேச்சிலே, எப்படி பளிச் செனத் தெரிகிறது பார், வேடிக்கையாக இருக்கும். திருநீறு, திருநாமம், இவைகளை அணிந்து கொள்ள வேண் டும். அது பக்திக்கு அடையாளம், பரிகாசத்துக்கு உரியதல்ல, என்று வலியுறுத்துகிறார் ஆச்சாரியார். கேள்.அவர் பேச்சை, "சைவம் வைஷ்ணவம் என இரண்டு விதமான சமயம் நாட்டில் பரவி வருகிறது, முக்கியமாக முகத்தில் போடும் நாமக் குறியிலிருத்து தெரிகிறது. இதில் மறைவு கிடை யாது. எல்லோருக்கும் தெரியும்படியாகப் போட்டுக் கொள்ளும்படி ஆச்சாரியார்கள் சொல்லியிருக்கிறார்கள்.' இவ்விதம் பேசி, திருநாமம் அணிந்தாக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். சைவர்களிடமா, என்று ஆச் சரியப்படாதே. அவர்கள் திருநீறு பூசட்டும், வைணவர் திரு நாமம் தரிக்கட்டும் என்பது பொருள், என்று பெருந்தன்மையு டன் ஒப்புக்கொள்வோம். திருநாமத்தின் அவசியத்தை இவ்வளவு வலியுறுத்தி ஆச்சாரியர்கள் ஆக்ஞையிட்டுள்ளனர் என்று ஆதாரம் காட் டிப் பேசினாரே தவிர, அவருக்குக் குழப்பம் வராமலில்லை. அவர் நெற்றியில் நாமம் இல்லை! மற்றவர்களுக்கு நாமம் போடச் சொல்லி வலியுறுத்துகிறார். அதன் மகிமையை எடுத்துக் கூறு கிறார். அவர் நெற்றியிலே நாமம் இல்லை. என்ன எண்ணிக் கொள்வார்களோ, என்று குழம்புமல்லவா! எனவே சொல் கிறார், அதேபோது,