பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

69 "எனக்கு நாமக்குறியில்லையே என்று நீங்கள் யோசிக்கலாம். வேஷத்தில் பக்தி இல்லை" என்று கூறு கிறார்! எப்படி இருக்கிறது வாதம்? எவ்வளவு குழப்பம், எவ்வ ளவு பெரியவருக்கு?' திருநாமம் தரித்தல் அவசியம் - ஆச்சார்யாள்: சொல்லியிருக்கிறார்கள்! இதைச் சொல்வதும் ஆச்சாரி யார்தான் - நாமக்குறி இல்லாவிட்டால் என்ன, வேஷத் தில் பக்தி இல்லை என்று சொல்பவரும், அவரேதான்! வேஷம் பக்தியல்ல என்பதை நம்பினால், நாமம் போட் டாக வேண்டும், அதுவும் எல்லோருக்கும் தெரியும்படி போட் டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கத் தேவை யில்லை! நாமம் தரித்தாக வேண்டும், ஆச்சார்யாளின் கட்டளை அது, அதனை மீறக் கூடாது என்பதிலே உறுதியும் நம்பிக்கை யும் இருந்தால், நாமம் தரித்துக்கொண்டு சென்றிருக்க வேண்டும். எதிலும் உறுதிப்பாடும், உத்வேகமும் இல்லை, எனவே உள்ளத்தில் ஒரே சேறு!1 இந்நிலை இவருக்கு என்றால், சில்லரைகள் சிரமப்படுவ திலே ஆச்சரியமென்ன. தம்பி! இவைபற்றி நான் எழுதுவதற்குக் காரணம், இவர் களைக் கேலி பேசிக் களிப்பூட்ட வேண்டும் என்பதல்ல. நாம் பெற்றுள்ள கருத்துகள், மேற்கொண்டுள்ள பணி, எவ்வளவு மாண்புள்ளது என்பதை விளக்கத்தான்! திறமை முழுவதை யும் ஆற்றல் அவ்வளவையும், தந்திரம் அத்தனையையும் உபயோகித்தாலும், வெற்றி காண முடியாத நிலையில் ஆச்சாரி யார் போன்றோர் தள்ளப்பட்டுள்ளனர்-காரணம், அவர்கள் செத்த பாம்பின் முன்பு மகுடி ஊதிப்பார்க்கிறார்கள்!! இவர் களைவிட "எனக்கொன்றும் தெரியாது. இட்லி மாவு அரைக்க வேண்டும்" என்று கூறிவிட்டுச் சென்ற அம்மையார் எவ் வளவோ மேல், என்பேன். செத்த பாம்பைப் படமெடுத்தா டச் சொல்லி மகுடி ஊதும் இந்த மகானுபாவர்களைவிட இந்ந மாதுசிரோமணி எவ்வளவோ மேல்தான், சந்தேகமின்றி 26-6-1955 அன்புள்ள, Jimmyrz .