பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

கடிதம்: 8 பேசட்டும்,தம்பி, பேசட்டும் ராஜா சிதம்பரத்தின் காங்கிரஸ் நுழைவு-அமைச்சர் சுப்ரமணியம் - தொழில் துறையில் சென்னையின் பின் தங்கிய நிலை. தம்பி, அமைச்சர் சுப்ரமணியம் ரொம்ப ரொம்ப ரோஷக்காரர்! நிறுத்து அண்ணா! யார் ஒப்புக்கொள்வார் இதை? துளி யாவது அவருக்கு ரோஷம் இருப்பதாகக் காணோமே? என்று கூற எண்ணுகிறாய். தம்பி, சென்ற கிழமை அவர் லால்குடியிலும் திருச்சியி லும் பேசியதைப் பத்திரிகையில் பார்த்திருப்பாயே, அதற்குப் பிறகுமா. அவர் ரோஷக்காரர் என்று ஒப்புக்கொள்ள மறுக்கி றாய் என்கிறேன் நான். போ! போ! அண்ணா! ஏதோ இரண்டோர் கூட்டத்திலே தலைகால் தெரியாமல் அந்த ஆசாமி துள்ளிக் குதித்து, கண் மண் தெரியாமல் பேசி விட்டதாலேயே, அவரைரோஷக்காரர் என்று கூறிவிட முடியுமா? எத்தனையோ வில்வங்கள், துளசிகள் விதவையானதுகள், இதைவிடக் கடுமையாகத் தாக்கிப் பேசி, தமது எரிச்சலைக் குறைத்துக்கொள்ள முயன் றன : இதை ஒரு காரணமாகக் கொண்டு, அமைச்சர் சுப்ரமணி யத்தை ரோஷக்காரர் என்று கூறினால், நான் ஒப்புக்கொள்ள முடியாது.ஒருவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ரோஷக் காரர்தான் என்பதை நாட்டுக்கு எடுத்துக்காட்டும் வாய்ப் பொன்று அவருக்குக் கிடைத்தது-ஆனால், அவரோ தமது ரோஷத்தைச் சுருட்டி வைத்துக்கொண்டு, அகப்பட்டதை விடுவேனா என்று கூறினாரே தவிர, ரோஷக்காரராக நடந்து கொள்ளவில்லை, என்று கூறுவாய். தம்பி! கிடக்கட்டும்; நமக்குள் ஏன் தகராறு? அவர் கோபக்காரர், அதை ஒத்துக்கொள்கிறாயா? என்று கேட்கி றேன் - மறுக்க முடியாதல்லவா உன்னால்!! அதிலும் சென்ற கிழமை 'கோபாதிபதி' அவருக்கு உச்சஸ்தானத்தில் இருந் திருக்கிறான்! எப்படி இல்லாமலிருக்க முடியும்? குடந்தையில் வரவேற்பு, திருச்சியில் விழா, சென்னையில் கொண்டாட்டம், கோவையில் குதூகலம், மதுரையில் மகத்தான வரவேற்பு