பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74 பத்மா!பத்மா!- மெல்லிய குரலில்தான் கூப்பிட முடியும். அண்டை அயலார் காதில் விழக்கூடாது. பத்மா. அவன் படும்பாடு அறிவாள். எனினும், தான் படும்பாடு அறியாமல் நடந்துகொள்வதற்குத் தண்டனை தரு வதாக எண்ணிக்கொண்டு, நீண்ட நேரம் கதவு திறக்கவே கூடாது என்று துணிவாள். பத்மா! பத்மா ! ஏ! பத்மா! அவள் மனம் இளகிவிடும். இன்ப இரவு இப்படி சங்க டத்தோடு தொடங்கலாமா! அப்போதுதான் விழித்துக் கொண்டவள் போல. யாரது? என்பாள், 'நான் தான் ......... பத்மா.. நான் தான்' என்கிறான். சாயா சாப்பிடக் கிளம் பியவன். "நான் தான் என்றால்" என்று கேட்டபடி, பூங் கொடி அசைந்தாடி வருகிறது, கதவு திறக்கிறது, கைவளை ஒலிக்கிறது, கன்னம் படாதபாடு படுகிறது. "போதும் உங்களோட கொஞ்சுதலும், சரசமும்!' "என்ன பத்மா! ஏன் ஒரு மாதிரியா இருக்கறே?" "மணி என்ன இப்ப? ""பத்து இருக்கும்' "குணா கடியாரத்திலே பத்து --பத்மாவீட்டுக் கெடி யாரம் இப்ப பன்னிரண்டு அடித்தது" "இருக்காதே!க "சரி, ஒரு அரையோ காலோ குறைவாக இருக்கட்டும்- ஆனா, ஏனுங்க இப்படி என் மனசைச் சங்கடப்படுத்தறிங்க. எவ்வளவு நேரம் விழிச்சிக்கிட்டு இருக்கறது -பத்து மணிக் காச்சும் வரப்படாதா.3" "எப்படி, பத்மா, அவ்வளவு பொழுதோடு வரமுடியும். யாராவது பார்த்து விட்டால்.3 "பார்த்துவிட்டால் தான் என்னவாம்! அட அடா? இந்தப் பாழாய்ப்போன பயம் ஏன் உங்களுக்கு இவ்வளவு இருக்கிறதோ?...3 "கண்டவர் கண்டபடி பேசுவார்களே என்கிற பயம் தான்....3 பயம்! பயம்! பயம்! செச்சே, இவ்வளவு கோழையாக இருக்கக் கூடாது - ஆண்பிள்ளை தானே நீங்கள் ... பக்கத்து வீட்டு மக்கு இருக்கே, சொக்கு, உங்க சினேகிதர் சிதம்பரத் தோட ஜோடி...அவர் எத்தனை மணிக்கு வந்தார் தெரி யுமா, எட்டுக்கூட அடிக்கல்லே அவர் வருகிறபோது..உங்க ளைப் போல பயந்து பாதிராத்திரிக்குத் திருடன் போலவா அவர் வருகிறார். அவருக்கு இருக்கிற தைரியம் ஏன் உங்க ளுக்கு வரக்கூடாது. பயந்து பயந்து சாகிறீர்களே - செச்சே இவ்வளவு கோழைத்தனம் கூடாது."