பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

75 இப்போது கனம் சுப்ரமணியனார் பத்மா பாணியில் பேசு. கிறார்; கதை நினைவிற்கு வந்ததும் எனக்கு இப்படித்தான் தோன்றிற்று. ராஜா சிதம்பரம் எவ்வளவு தைரியமாகக் கட்சி மாறினார். மக்கள் எக்கேடோ கெட்ட்டும், எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். காரியம் பெரிதே தவிர, கண் ணியம், நாணயம் இவைகளெல்லாம் அல்ல, என்று துணிந்து கதராடைக் கூடாரத்துக்குள் நுழைந்திருக்கிறார். இதைப் பார்க்கிறீர்களே, ஏன் உங்களுக்கு அந்தத் தைரியம், வீரம் வரவில்லை என்கிறார். வழிதவறி நடந்திடும் வாலிபனுக்கு விருந்தளித்து வசியப்படுத்த முனையும் வழுக்கி விழுந்த வனி தையின் பேச்சுப்போல, நாட்டில் மாபெரும் போராட்டம் நடாத்தி விடுதலைபெற்றுத் தந்ததென விருது படைத்த காங் கிரசில் கலந்து, கனமானவர் பேசுவது, ஆசை வெட்க மறியாதாமே!! அமைச்சர் பெருமானின் அகராதிக்கு, நாம் மதிப்பளிக்க மறுக்கிறோம்; அவருடைய அழைப்பு, ராஜா சிதம்பரம் போன்றோரோடு நிற்கட்டும். தமக்கென்று ஒரு கொள்கையும் அதிலே வெற்றிகாணப் பணியாற்ற வேண்டும் என்ற உறுதி யும் திறமையும் பெற்றோர்களிடம் இத்தகைய அழைப்பும் அங்கலாய்ப்பும், நிந்தனையும் நையாண்டியும் வீசிப்பயனில்லை. இதை ஓரளவுக்கு உணர்ந்து, அமைச்சர், கடைக் கண் காட்டுவதை நிறுத்திக் கொண்டு, கனலை உமிழ்ந்து பார்த்தி ருக்கிறார்; கனிமொழி கேட்டுச் சொக்கிடாத நிலை மட்டுமல்ல, கனலைக் கண்டு கலங்கிடாத உள்ளமும் நாம் பெற்றிருக்கி றோம் என்பதை, அவர் அறியார் போலும்! அவருடைய குரு நாதரின் அக்கினியாஸ்திரங்களைக் கண்டு கெக்கலி செய்தவர் களிடம், இவர் தீக்குச்சியாஸ்திரங்களை வீசிப் பார்ப்பது விந்தைதான்! அமைச்சர், நாம் ஐந்தாண்டுத் திட்டத்திலே காட்டப் பட்ட ஓர வஞ்சனை பற்றிக் கூறிவருவது கண்டு, பீதி அடைந் திருக்கிறார். இவர் மட்டுமல்ல, காங்கிரஸ் வட்டாரத்தை, ஐந்தாண் டுத் திட்ட கண்டன நாள் கூட்டங்கள், ஒரு கலக்கு கலக்கி விட்டிருக்கிறது. மந்திரிகளாம், மந்திரிகள்! சுளை சுளையாகப் பணம்மட்டும் வாங்குகிறார்கள் சம்பளமாக! துளியாவது சூடுசொரணை காணோம். சூறாவளிபோலப் பிரசாரம் நடைபெறுகிறது, வட நாடு, தென்னாடு என்று! தடுத்திடும் ஆற்றல் காணோம் - நம் மைக் காணும்போது மட்டும், தாசானுதாசன் என்று தோத் தரிக்கின்றார்கள்! ஏன் அந்தப் பிரிவினைக் கிளர்ச்சிக்காரருக்கு