பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

78 வடநாடு நாம் சென்றறியோம் என்று பேசி, தமது ஞான சூன்யத்தைக் காட்டிக் கொள்ளட்டும், குறுக்கிடவில்லை: ஆனால் நாம் போனதில்லை என்றே வைத்துக்கொள்வோம், அம்புஜம் அம்மையாரென்ன, அனுமந்தையா என்ன, கேசவ மேனன், அன்னா மஸ்கரினீஸ், சுதேசமித்திரன் ஆசிரியர் சீனுவாசனென்ன, இவர்களெல்லாம் கண்டித்திருக்கிறார் களே வடநாட்டு ஆதிக்கத்தை அமைச்சர் லாம், ஏன் வாயடைத்துக் கிடந்தார்!! அப்போதெல் "தொழில் முறையில் சென்னை மாகாணம் பின் தங்கிய நிலையிலிருக்கிறது. முதல் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் எந்த அளவுக்கு இந்திய அரசாங்கத்தின் கவனத்தைத் தென்பகுதி பெறவேண்டுமோ அந்த அளவுக்குப் பெறவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை என்று தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது தமிழ் நாடு 24-6-55-இல்11 அமைச்சர் என்ன பதிலளிக்கிறார் இதற்கு!! அடுக்கடுக் காக ஆதாரங்களைக் கொட்டிக் குவித்துக் காட்டி வருகிறோம். எதை மறுத்தார் -எதை மறுத்திட முடியும்? நாள் தவறாமல் வந்த வண்ணமிருக்கிறதே, நன்றாகப் படித்தவர்களையும் கவரும் வகையில்! எப்படி இதனைத் தடுத்திடப் போகிறார் வாய்ப்பறை கொண்டு ஊர்ப்பகை தேடிக்கொள்ளும் இந்த உத்தமர்! காரமான ஒரு சிறு துண்டு தருகிறேன் - இப்போதுதான் பறித்தெடுத்தது அமைச்சர் பதவியைச்சுவைத்திடும் வாயால் இதையும் சிறிதளவு சுவைத்துப் பார்க்க வேண்டுகிறேன். இங்கு, மிளகாய் உற்பத்தி அதிகமாகிச் சரக்குத் தேங் கிக் கிடக்கிறது. இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடும் அனுமதி டில்லிதான் தரவேண்டும்! ஆதிக்கம் அவ்விதம் அமைக்கப் பட்டிருக்கிறது. மிளகாய்க்கு மட்டுமல்ல, எதற்கும் இதேதான் நிலைமை. மிளகாயைப் பொறுத்த மட்டில் இங்கு சரக்குக் குவிந்து கிடக்கிறது, வெளிநாடுகளுக்கு அனுப்பும் அளவு டில்லி நிர்ணயித்திருப்பது போதுமானதாக இல்லாததால். எனவே, டில்லி பாதுஷாக்களே! அருள் கூர்ந்து,மிளகாய் ஏற்றுமதியின் அளவைச் சற்றே அதிகப்படுத்தித் தருவீராக! - என்று சென்னை வர்த்தக சபையினர் வேண்டுகோள் விடுத் துள்ளனர் என்ற செய்தி, அமைச்சர் தீப்பொறி பறக்கத் திருச்சியில் பேசிக்கொண்டிருக்கும்போது வெளிவருகிறது. ஜூன் 21 தேதிய பத்திரிகைகளைப் பார்க்கலாம்- தேசிய இதழ்களையே!!