பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

79 தென்னாட்டின்மீது வடநாடு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு இது சான்று அல்லவா? வடநாட்டு ஆதிக்கம் இருப்பது மட்டுமல்ல, இந்தச் செய்தி மூலம் தெரிவது. வர்த்தக சபை கூறுகிறது. இங்கிருந்து மிளகாய் வெளி ராஜ்யங்களுக்கு (வடக்கே உள்ள ராஜ்யங்கள் சென்று அங்கி ருந்து ஏற்றுமதியாகின்றன. தம்பி, தெரிகிறதா இதிலே காணப்படும் அக்ரமம்! வெளிநாட்டுக்கு, மிளகாய் நாம் நேராக அனுப்ப முடி யாது; டில்லி அனுமதிக்க வேண்டும். டில்லியோ, மிகக் குறைந்த அளவுதான் ஏற்றுமதிசெய்யு அனுமதி அளிக்கிறது. இங்கே சரக்குத் தேங்கிவிடுகிறது. தேங்கிக் கிடக்கும் சரக்கை, வடநாட்டு ராஜ்யங்கள் இங்கிருந்து தருவித்துக் கொள்கின்றன. அங்ஙனம் தருவித்திடும் சரக்கை, அந்த ராஜ்யங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இலாபத்தை அனுபவிக் கின்றன. "அனுகூலம் இங்குள்ள உற்பத்தியாளருக்கோ வியாபா ரிக்கேர கிடைப்பதில்லை." என்று வர்த்தக சபை தெரிவிக் கிறது, நாசுக்காக. பச்சையாகக் கூறுவதானால், இங்குள்ள விவசாயி வயிற்றிலும். வியாபாரியின் வாயிலும் அடித்து, வடநாடு மிளகாய் ஏற்றுமதி மூலம் இலாபம் பெறுகிறது, என்பது தான்! இதற்கு என்ன பெயரிடுவது-பாரத்வர்ஷத்தின் விரிந்த பரந்த மனப்பான்மை என்றா?-நேரு சர்க்காரின் நேர்மை என்றா?- அல்லது அமைச்சர் பதவியை சுப்பிரமணியனார்கள் ஆண்டு அனுபவிப்பதற்காக, நாட்டு மக்கள் தரும் 'முறிப் பணம்' என்பதா-என்ன பெயரிடச் சொல்கிறார் அமைச்சர் எப்படி இந்த அக்ரமத்தைச் சகித்துக்கொள்ள முடியுமென் கிறார். வடநாடு தென்னாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தாம லிருந்தால், இந்த அநீதிக்கு இடம் ஏது? மிளகாய் பற்றிய சம்பவம் காரம் அதிகம் கொடுத்திடும்; 'கனம்' தாங்கமாட்டார். எனவே, தம்பி, அவருக்குச் சிறிது ருசியும் பசையும் உள்ள பண்டம் குறித்த சம்பவத்தைத் தரு வோம். பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து, இங்கு, பருப்பு நவதானியம் தருவிக்கப்பட்டு வருகிறது. தம்பி!இதற்கு இரயில்வே வாகன்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை. ஏன்? வாகன்களின் அளவு குறித்து அனுமதி அளித்திடும்