பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

80 அதிகாரம் அங்கே இருக்கிறது -டில்லியில் இதனால் போது மான அளவு வாகன்கள் கிடைக்காமல், திகைப்பும் பொருள் இழப்பும் ஏற்படுகிறது. டுள்ள ஆறு மாதங்களுக்கு முன்பு அங்கு வாங்கி வைக்கப்பட் சரக்கு, வாகன்கள் கிடைக்காததால், பஞ்சரபி லும் ராஜஸ்தானிலும் கிடக்கின்றன-வெயிலும் மழையும், எலியும் பிறவும் பண்டத்தைப் பாழாக்குகின்றன - இங்கு மார்க்கட்டில் விலை சூடு பிடிக்கிறது, அங்கே வாங்கிய சரக்கு, முடமாகிக் கிடக்கிறது, ஏன் தம்பி! இத்தநிலை வரவேண்டும்? வடநாடு பார்த்து வைப்பதுதான் சட்டம், திட்டம் என்று இருப்பதால்தானே, வாகன் கிடைக்குமா என்று இங்குள்ள வர்கள் தவம் கிடக்கவேண்டி வருகிறது, வரம் தாருமய்யே என்று தென்னிந்திய வர்த்தக சங்கம் அறிக்கை மூலம் இறைஞ்சுகிறது டில்லியை! ஜூன் 21-ஆம் நாள் இதழில் இதையும் காணலாம். அக்ரமம், இன்னும் தம்பி, அந்த அறிக்கையில். பம்பாய் - கல்கத்தாவுக்கு மட்டும் வாகன்கள் தேவையான அளவு ஒதுக்கப்பட்டு சென்னை புறக்கணிக் கப்படுகிறது என்றும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பதவியைச் சுவைத்திடும் மகிழ்ச்சியில், 'கனம்' இங்கு நம் மீது காய்கிறார். பாய்கிறார்? வெளிப்படையாகவே தெரிகிறது தம்பி! 'கனம்' சைவரோ, சுவையும் சத்தும் தேவை என்பதற்காக 'அன்னிய பதார்த்தம்' சாப்பிடுகிறவரோ, எனக்குத் தெரியாது- சைவராக இருந்தால் சிறிது நெடியாக இருக்கும்; இல்லையானால் நாவில் நீர் ஊறும், இப்போது தரப் போகும் சம்பவத்தைக் கவனித்தால். ராட்டு என்கிறார்கள் ~ இறா என்பார்கள் - அந்தக் கடற் கனி ஏராளமாகப் பர்மாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரு கிறது, திருவிதாங்கூர் கொச்சிப் பகுதியிலிருந்து, பெரும் அள வில். இதை நம்பி வாழும் மீனவர்கள் ஏராளம்-வியாபாரி களும் உளர். இப்போது பர்மா சர்க்கார், இதற்கான அனுமதி வழங்கும் முறையிலே நட்டுத் திட்டம் கடுமையாக ஏற்படுத்திவிட்டிருக்கிறது; இந்த ஏற்றுமதி சிதைந்துவிட் ட்டது. இதன் பயனாக இலட்சக்கணக்கான சிறியதல்ல குடும்பங்கள் அல்லற்படுகின்றன. பிரச்சினை சிறியதல்ல தம்பி! பண்டம் வேண்டுமானால், சாதாரணம் என்பர். எட்டு இலட்சம் மீனவர்களின் வாழ்வு பாதிக்கப்பட் டிருக்கிறது. மூன்று கோடி ரூபாய் பெருமானமுள்ள பண்டம் தேங்கிக் கிடக்கிறது. அஜீத் பிரசாத் ஜெயின் எனும் வடநாட்டு மந்திரியிடம்தான் முறையிட்டுக்கொள்ள வேண்டி