பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

83 விட்டு, சேற்றை வாரியும் நம்மீது வீசிட முற்பட்டிருக்கும் ராஜா சிதம்பரனார் ! அந்தச் சிதம்பரனார் பிறந்த அதே நாட்டில் இப்படியும் ஒரு சிதம்பரனார்! தம்பி ! நமது கழகத்துக்கு நாட்டிலே வளர்ந்து வரும் செல்வாக்குக் கண்டு, ரோஷம் பொங்கி இப்படிப் பேசுகிறார் போலிருக்கிறது இந்த 'கனம்' -ஒப்புக்கொள்ள மறுக்கிறாய்- துவக்கத்திலேயே தான் சொல்லிவிட்டாயே, காரணம் எனக் கும் தெரிந்ததுதானே -ரோஷக்காரராக இருந்திருந்தால் இவர் ஆச்சாரியாருடைய தொண்டரடிப்பொடி ஆழ்வாராக இருந்தபோது புகுத்திப் போற்றிப் பாராட்டிய குலதர்மக் கல் வித் திட்டத்தை, காமராஜர் கட்டளையிட்டதும் குழிதோண் டிப் புதைத்துவிட்டுச் சுடலைக் காசுபோலப் பதவியைப் பெற் றுக்கொண்டிருப்பாரா? "என் திட்டம் இல்லையா. அப்படி யானால் நான் பதவியில் இரேன். நான் ரோஷக்காரன், கொங்கு வேளாளர் குடிப்பிறந்த எவரும், இப்படிக் குட்டக் குட்டக் குனிந்து கொடுத்து, எட்டுக் குட்டுக்கு ஆறணா எடு, ஆருறு முப்பத்தாறு இரண்டேகால் ரூபா, என்று கேட்கும் போக்கில் இருக்கமாட்டார்கள். அதற்கு வேறு ஆளைப் பாரு மய்யா. நான் இதோ பதவியை விட்டுப் போகிறேன். கோர்ட் அழைக்கிறது, கொங்கு நாடு அழைக்கிறது, மானம் கட்டளையிடுகிறது, ரோஷம் குத்திக் குடைகிறது"- என்று கூறியல்லவா, வெளி ஏறியிருந்திருக்க வேண்டும். மந்திரி யாகத்தானே இருக்கிறார். "அவர் கட்டிய தாலியை இதோ அறுத்தெரிந்து விட் டேன்,சுவரேறிக் குதித்து வந்த சுந்தரனே! கட்டுதாலி உன் கையாலே! அதற்கும் விருப்பம் இல்லையேல், அதுவும் வேண் டாம், வேளைக்குச் சோறு, சாயம் போகாச் சேலை, சாயந்தி ரத்தில் மல்லி, சாய்ந்துகொள்ள மெத்தை..." என்று பட்டி யல் கூறிடும் கண்வெட்டுக்காரி, மன்றம் ஏறிவாழும் வழி பற்றிப் பேசிடுவதில்லை; அமைச்சரல்லவா, பேசுகிறார்! பேசட்டும், தம்பி! பேசட்டும்! பூர்ணகும்பம், அர்ச்சகர் சங்க வரவேற்பு, நிலப்பிரபுவின் விருந்துபசாரம். இது கூடவா, பேசக் கூடாது? பேசட்டும் தம்பி, பேசட்டும். நமது வேலையை இந்தப் பேச்சும் ஏச்சும், துளியும் பாதிக்காது. 3-7-1955 27 அன்புள்ள,

Jimmy wz