பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

கடிதம் : 9 தம்பி, கள் குருபீடம் தோழர் என்.வி.நடராசன் அவர்களின் காங்கிரஸ் வாழ்க்கை - காங்கிரசில் புதியதோர் நுழைவு- செட்டி நாட்டு அரசர். வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கான காரணங்களை நான் விளக்கி எழுதியதை, பண்புள்ள காங்கிரஸ் நண்பர்களுக்குப் படித்துக் காட்டியதாக எழுதியிருப்பது கண்டு, மகிழ்கிறேன். அவர்களிடம், நீ படித்துக் காட்டியபோது, நிச்சயமாக அவர் பெருமூச்செறிந்திருப்பார்கள் - அவர்களால் இப்போ தைக்கு வேறெதுவும் செய்யமுடியாது. இன்னமும் பண்டிதர் ஊட்டும் மயக்கம் வேலை செய்கிறது. அவர்களாலே அவ்வளவு சுலபத்தில், எளிதாக அந்தமயக்கத்திலிருந்து விடுபட முடி யாது. மெள்ள மெள்ளத்தான் உண்மை அவர்கள் உள்ளத் திலே நுழையும், அதுவரையில் நமக்குத்தான் பொறுமை வேண்டும். நமக்கு நமது கொள்கையில் திடமான நம்பிக்கை இருக்கும் போது பயமென்ன? எப்படியும் இன்றுமாற்று முகா மில் உள்ளவர்களிலேயே பலர், நம்மோடு சேரும் நாள் வரத் தான் போகிறது! உனக்கு நமது நண்பர், ஓயாது உழைக்கும் என்.வி.நடராசன் தெரியுமல்லவா! அவரை என்ன வென்று எண்ணிக் கொண்டாய்! ! ஏ! அப்பா! அதி தீவிரக்காங்கிரஸ் காரராச்சே! சண்டமாருதச் சிங்கம் சத்தியமூர்த்தியின் பிரத் யேகப் பயிற்சிக் கூடத்தில் பல ஆண்டுக் காலம் இருந்தவர்! சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியிலே உறுப்பினர் எதிர் கால கார்ப்பரேஷன் மெம்பர் என்றும், ஒருசான்சு அடித்தால் எம்.எல்.ஏ ஆகலாம் என்றும் கூறி வந்தனர் - சென்னையில் எங்கு பார்த்தாலும் இந்த 'எலும்பு மனிதர்' காங்கிரசல்லாத கட்சிகளின்மீது கண்டனம் பொழிவார்! வசை மொழியால் என்னை அர்ச்சிப்பதில் அவருக்கு அப்போது அலாதி ஆசை!! நான் கார்ப்பரேஷன் தேர்தலில் ஈடுபட்டபோது என்னைத் தோற்கடிக்க, முழுமூச்சாக வேவை செய்தவர். அப்போதெல் லாம், அவரிடம் 'நாலாம் தமிழ்' நடமாடும்! நாலாம் தமிழ் என்றால், தெரியவில்லையா, இயல். இசை, நாடகம் - முத்தமிழ்! வசை, நாலாம் தமிழ்!! என்ன அப்படி பிரத்யேகப்பெயரிட்டு அழைக்க வேண்டிய அளவுக்கு வசை இருந்தது, என்கிறாயா