பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

85 கேள், தம்பி; சொல்கிறேன்! நீ, எத்தனையோ விபூதி வில் வங்கள் ஏசிப் பேசக் கேட்டிருப்பாய், இதுபோலக் கேட்ட துண்டா சொல், பார்ப்போம். "நெஞ்சிலே இருக்கிற மஞ்சா சோறு வெளியே வரும்- ஆமாம். 533 இதற்கு நாலாம் தமிழ் என்று தனிச் சிறப்பு அளிக்கா மலிருக்கலாமா, சொல்லு. பொருள் என்ன தெரியுமோ இதற்கு-ஒரு தாக்குத் தாக் கியதும் கிறுகிறு என்று தலைசுற்றி, வாந்தி எடுக்க வேண்டி நேரிடும் - அப்போது உண்ட சாதம் மஞ்சள் மஞ்சளாக வெளியே வரும்! இது தான் பொருள்! பேசினது - நம்ம நடராசன்! எனக்குத்தான் இந்த அர்ச் சனை! தேர்தல் காலம்! தேச பக்தி அவருக்குத் தலையில் ஏராளமாக! தூபம் போட சத்திய மூர்த்திகள்; எனவே நாலாம் தமிழைத் தாராளமாகப் பொழிந்தார்; எனக்கு அவர் எப்படி அந்த நடையை இப்போது மறந்துவிட்டார் என்று கூடச் சில சமயங்களிலே ஆச்சரியமாக இருப்பதுண்டு. நடை இது; உடை கதர்! படையும் உண்டு. மாலைக் கல கத்துக்கு ஆறணா; இரவுக் கலகத்துக்கு எட்டணா; நோடீசைக் கிழிக்க ஒரு ரூபாய்; சாணிவீச இரண்டணா; கனைத்துக்காட்ட ஒரு அணா ; முண்டா தட்ட மூன்றணா; மூலை முடுக்கிலே நின்று வம்புச் சண்டை போட மூன்று ரூபாய்.இப்படி 'ரேட்' பேசிக் கொண்டு, பாரதமாதாவுக்குச் சேவை செய்யும் படை வீரர்கள் உண்டு! இத்தனைக்கும் எனக்கு அவர் அப்போதும் நண்பர் தான்! தொழிலாளர் இயக்கக் காரியத்தில் ஒன்றா கவே வேலை செய்வோம். உன்னிடம் உண்மையைச் சொல் வதிலே தவறு என்ன, ஆங்கிலத்திலே ஏதாவது தொழி லாளர் சங்கத்துக்குக் கடிதம் வந்துவிட்டால், என்னிடம் தான் கொண்டுவந்து காட்டுவார்!! காலையில் இது - மாலை வந்தாலோ 'போலோ பாரத்மாதாக்கீ' யாகி விடுவார்! அப்படிப்பட்டவர் இன்று, எவ்வளவு அரும்பணியாற்றி வருகிறார், திராவிடர் இயக்கத்தில், என்பதைப் பார்க்கிறாயல் லவா? கட்டாய இந்தியை நுழைத்தார் ஆச்சாரியார். இந்தி எதிர்ப்புப் போர் துவங்கிற்று! நாம் பதறாமல் பகை வளர்த்துக் கொள்ளாமல், தமிழ்ப் பண்பு கெடாமல், கொள்கை வழுவாமல், குறிக்கோள் மறவாமல், எதிர்ப்புக்கு அஞ்சாமல்,பணியாற்றினோம் - காங்கிரஸ் வட்டாரத்திலேயே நமக்கு ஆதரவு அரும்பிற்று; நடராசன் போன்ற பல காங் கிரஸ் நண்பர்கள். நாங்களும் தமிழர்களே! எங்களுக்கும் தமி