பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

86 ழார்வம் உண்டு! நாங்களும் இந்திக்கு அடிமையாக மாட் டோம்' என்று பேசினர் - முதலில் நம்மவர்களைச் சந்திக்கும் போது - பிறகு தங்களுக்குள்ளேயே - அதற்கும் பிறகு காங் கிரஸ் மேடைகளிலேயே!! இதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். இந்தி எதிர்ப்பும் பேசும் காங்கிரஸ்காரர்களை அடக்கியாக வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது, சத்தியமூர்த்தி களுக்கு. சத்தியமூர்த்திகள் தடை விதித்தாலும் மீறி, தாய்மொழி யைக் காக்கும் பணிபுரிந்தாகவேண்டும் என்ற கட்டம் வந்து விட்டது, நடராசன் போன்றோருக்கு. சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் இந்தப் பிரச்சினை கிளம்பிவிட்டது! நல்ல வார்த்தை சொல்லி நடராசனைக் கோட்டையில் பூட்டிவிடச் சத்தியமூர்த்தி திட்டமிட்டார் தாய்மொழிப்பற்றுக்கு இடமளித்து விட்ட பிறகு, நடராசன் காங்கிரசின் கட்டுதிட்டத்தை உடைத்தெறிந்து விட்டு வெளி வந்து விடுவார் என்று எனக்கு நன்றாகத் தெரிந்து விட்டது. எனவே, சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடைபெறும் நாளே, நான், நமது நண்பர்கள், சென்னை பெத்துநாயக்கன் பேட்டையில் நடத்தும் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில், காங்கிரசை விட்டு விலகிய என்.வி. நடராசன் பேசுவார் என்று துண்டு அறிக்கை அச்சிட்டு, காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெறும் இடத்துக்கே நண்பர் கணேசன் மூலம் அனுப்பி விட்டேன். உள்ளே, கெஞ்சுதல், கொஞ்சுதல், மிரட்டல், சபித்தல் ஆகிய எல்லா ரசமான கட்டமும் நடந்தேறி,நடராசன் ராஜி நாமா செய்துவிட்டு வெளியே வந்தார் - அவரிடம் இந்த "நோடீஸ் தரப்பட்டது-'எப்படி இதற்குள் அச்சிட்டு விட்டீர் கள்' என்று கேட்டார்-இது காலையிலேயே அச்சாகிவிட்டது. இதுபோலத்தான் நடக்கும் என்று தெரிந்து அச்சிடப்பட்டது என்று கணேசன் கூற,நடராசன், அப்படியா?என்று கேட்டு விட்டு, நேரே, இந்தி எதிர்ப்புக் கூட்டத்துக்கு வந்தார். அன்று துவக்கப்பட்ட அரும்பணி, நாளாகவாக, தரமும் திறமும் வளரும் வகையில் நடைபெற்றவண்ணம் இருக்கிறது, எனவே தான் தம்பி, 'நான் சொல்வது, காங்கிரஸ் நண்பர்களிடம், நமது கொள்கையை எடுத்துக் கூறுவதிலே,பண்பு வேண்டும் என்று. அவர்கள் இன்று கோபம் கொண்டவர்களாக இருக் கிறார்களென்றால்,நாம் இன்னும் அவர்கள் உள்ளத்தில் புகத் தக்க·விதமாக, நமது கொள்கையை எடுத்துரைக்கவில்லை என்று தான் பொருள்! நடராசர்கள், எங்கும் இருக்கிறார்கள்!!